பங்குனி உத்திர வழிபாடு

murugar sivan
- Advertisement -

பங்குனி உத்திரம் என்பது மாதத்தில் 12 மாதமான பங்குனி மாதமும், நட்சத்திரத்தில் 12 வது நட்சத்திரமான உத்திர நட்சத்திரமும் இணைந்து, அன்றைய நாளில் பௌர்ணமியும் இணைந்து வருவது தான். அது மட்டுமின்றி நூறு ஆண்டுகளுக்கு பிறகு சந்திர கிரகணத்தன்று இந்த பங்குனி உத்திரம் வருவது மேலும் நமக்கு நல்ல பலனை தருவதாக அமைகிறது.

இன்றைய நாளில் முருகப்பெருமானை நாம் வழிபடுவது நம்முடைய வாழ்வை வளமாக்கும். அப்பேர்ப்பட்ட இந்த பங்குனி உத்திர நாளானது 24.3.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று வணங்க வேண்டுமா? அல்லது 25.3.2024 திங்கட்கிழமை அன்று வணங்க வேண்டுமா?என்பது பலரின் சந்தேகம். அதற்கான தீர்வாகவும் இந்த பதிவு இருக்கும். வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பங்குனி உத்திர வழிபாடு

இந்த வருட பங்குனி மாதத்தில் வரக் கூடிய உத்திரம் நட்சத்திரமானது 24.3.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.46க்கு தொடங்கி மறு நாள் 25.3.2024 அன்று காலை 11.16 வரை உள்ளது. அதே போல் பௌர்ணமி திதியானது ஞாயிற்றுக்கிழமை காலை 24.3.24 அன்று துவங்கி திங்கட்கிழமை 25.3.24 காலை 11.17 துவங்கி திங்கட்கிழமை மதியம் 1.16 வரை உள்ளது.

ஆகையால் உத்திர நட்சத்திர வழிபாட்டிற்கு உரிய நாள் 25.3. 2024 திங்கட்கிழமை தான். ஞாயிற்றுக்கிழமை முழுவதுமே இந்த திதி இருந்தாலும், எந்த ஒரு நாளில் சூரிய உதயத்தின் போது இந்த திதிகள் இருக்கிறதோ அன்றைய தினத்தில் தான் நாம் இந்த வழிபாடுகளை செய்ய வேண்டும். அப்படி பார்க்கையில் திங்கட்கிழமை அன்று சூரிய உதயத்தின் போது தான் பௌர்ணமி திதி, உத்திரம் நட்சத்திரம் அனைத்தும் இருக்கிறது.

- Advertisement -

புகழ் பெற்ற முருகன் ஆலயங்களிலும் கூட பங்குனி உத்திரமானது திங்கட்கிழமை அன்று தான் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் வீட்டில் எளிமையான முறையில் முருகப்பெருமானை எப்படி வணங்குவது என்று பார்க்கலாம். அன்றைய தினத்தில் காலையிலிருந்து இந்த உத்திரம் நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் இருக்கும் நேரத்திற்குள் வழிபடுவது சிறப்பு. அப்படி செய்ய முடியாதவர்கள் அன்றைய தினம் முழுவதுமே செய்யலாம்

அன்றைய தினத்தில் வீட்டில் இருக்கும் முருகர் படத்திற்கு அவருக்கே உகந்த மலரான செவ்வரளி மலரால் மாலை கட்டி சூட்டுங்கள். இத்துடன் வாசனை மலர்களையும் வைத்து விடுங்கள். முருகர் படத்திற்கு முன்பாக வெற்றிலை தீபம் ஏற்றுபவர்கள் அன்றைய தினத்தில் ஏற்றலாம் அல்லது ஒரே அகல் விளக்கையும் ஏற்றலாம். நெய்வேத்தியமாக கல்கண்டு பால், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவற்றை வைத்து ஊதுபத்தி சாம்பிராணி போன்றவற்றையும் காட்டி முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டின் போது முருகனின் திருநாமங்களை சொல்லுங்கள். கந்த சஷ்டி கவசம் படியுங்கள் இவை அனைத்துமே முருகனின் அருளை நமக்கு பரிபூரணமாக பெற்று தரும். அன்றைய தினத்தில் யாரேனும் ஒருவருக்கு அன்னதானம் செய்வது உங்களின் வழிபாட்டை மேலும் சிறப்பானதாக மாற்றும்.

அதுமட்டுமின்றி அன்றைய தினம் சிவபெருமானுக்கு உகந்த நாள் பௌர்ணமியும், சிவபெருமானுக்கு உகந்த தேதி திங்கட்கிழமையும் இணைத்து இருக்கிறது. சிவபெருமானுக்கு உகந்த நாள் அன்றைய நாளில் சிவபெருமானை வழிபடுவதும் சிறப்பு. சிவாலயத்திற்கு சென்று வணங்குவது மேலும் நல்லது.

இதையும் படிக்கலாமே: தோஷங்கள் நீங்க பிரதோஷ வழிபாடு

இத்தனை சிறப்பு அம்சங்கள் நிறைந்த பங்குனி உத்திர வழிபாட்டை எளிமையான முறையில் செய்து இந்த தெய்வங்களின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -