சிவன் கோவிலில் திங்கட் கிழமையில் இந்த எண்ணெயில் மட்டும் தீபம் ஏற்றினால் நினைத்தது நிச்சயம் நடக்கும்! உங்களுக்கும் அதிசயம் நடக்கும்.

sivan-vilakku

சிவன் கோவிலில் வேண்டும் வேண்டுதல்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும். சிவனிடம் கேட்கும் வரங்கள் அப்படியே கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நல்லவர், தீயவர் என்ற வித்தியாசமின்றி வரத்தை வாரி வழங்கும் வள்ளலாக எம்பெருமான் ஈசன் இருக்கின்றார் என்பது புராணங்களின் வாயிலாக நாம் கேள்விப்பட்டிருப்போம். அத்தகைய சிவனுக்கு எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டிய வேண்டுதல்கள் உடனே பலிக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Sivan-God

ஈசனிடம் வேண்டும் வேண்டுதல்கள் உடனே பலிக்கும். அவரை சரணடைந்தவர்களுக்கு வாழ்க்கையில் எந்த இன்னல்களும் நேர்வதில்லை. முத்தி பெற சிவ நாமம் ஒன்றே மனித பிறவிக்கு போதுமானது. தெரிந்தும் தெரியாமலும் நாவில் சிவ நாமம் உச்சரித்தால் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படியிருக்க அவரிடம் வேண்டும் வேண்டுதல்கள் எப்படி பலிக்காமல் இருக்கும்?

வரங்களை கொடுக்கும் கடவுள்களுக்கு ஒரு நியதி இருக்கும். யார் வரத்தைக் கேட்டாலும் உடனே அவர்கள் கொடுத்து விடுவது இல்லை. அவர்களின் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் தான் வரம் கிடைக்கும், ஆனால் ஈசனிடம் தவமிருந்து வரம் கேட்பவர்களுக்கு வேண்டிய வரம் உடனே கிடைக்கும். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது ஈசனுக்கு முக்கியமில்லை! எத்தகைய பக்திமான்கள் என்பது மட்டுமே அவருக்கு முக்கியம்.

sivan-4

பல புராணங்களின் அடிப்படையில் ஈசனிடம் வரம் பெற்ற பல்வேறு அசுர குலத்தவர்கள் அந்த ஈசனையே கதிகலங்க வைத்த சம்பவங்களும் நாம் படித்திருப்போம். வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைப்பது அரக்கர்களின் குணம். அப்படி தெரிந்தும் திருவிளையாடல்களை புரியும் ஈசனுக்கு பக்தர்கள் மீது அன்பு அதிகம். பொதுவாக ஒரு எண்ணெயுடன் இன்னொரு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் அது முறையல்ல. வீட்டில் இது போன்று ஒரு எண்ணெயுடன் இன்னொரு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் என்பது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

சுத்தமான எண்ணெய்களை ஒன்றுடன் ஒன்று கலந்து தீபம் ஏற்றுவது கோவில்களில் ஏற்றுவது உத்தமம். கோவில்களில் பஞ்சதீப எண்ணெய் ஏற்றுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். அதிலும் ஈசனுக்கு பஞ்ச தீப எண்ணெய் ஏற்றி வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் அப்படியே ஈடேறும் என்பது நம்பிக்கை. வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய முக்கியமான எண்ணெய்கள் ஐந்தையும் ஒன்றாக சம அளவில் கலந்து தீபம் ஏற்றுவது விசேஷமான சக்திகளை நமக்கு கொடுக்கும்.

agal-vilakku

சிவனுக்கு உகந்தது பஞ்ச தீப எண்ணெய் ஆகும். அதுவும் திங்கட்கிழமைகளில் இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் அதற்குரிய பலன்கள் அபரிமிதமாக இருக்கும். திங்கட்கிழமையில் பொதுவாக சிவ வழிபாடு செய்வது வெற்றியை தேடி தரும். எத்தகைய துயரம், துன்பமும் நீங்க திங்கட்கிழமையில் சிவ மந்திரத்தை உச்சரித்து, சிவனை தரிசனம் செய்தால் போதும். அதிலும் திங்கட்கிழமை மாலை வேளையில் சிவன் கோவிலுக்கு சென்று, சிவன் சன்னிதியில் பஞ்சதீப எண்ணெய் ஏற்றி வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள், எவ்வளவு கடன்கள், எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அவை நீங்கி வாழ்க்கை வளமாகும். பஞ்ச தீப எண்ணெய் எரியும் ஜோதியில் இறைவனின் பஞ்ச பூத சக்திகளையும் காண முடியும். எத்தகைய வறுமையும் நீங்க திங்கட்கிழமையில் சிவன் கோவிலுக்கு சென்று சிவ வழிபாடு செய்வது உத்தமம்.