கையில் பணமே தங்க வில்லையா? பசுவிடமிருந்து கிடைக்கும் இந்த ஒரு விளக்கு வெள்ளிக்கிழமைகளில் விளக்கோடு எரிப்பதால் கெட்டவை நீங்கி பணப்புழக்கம் அதிகரிக்கும்!

panjakavya-vilakku-komatha

நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் சில சமயங்களில் அதற்கேற்ற செலவுகளும் சரியாக போய்விடும். எங்கிருந்து தான் செலவு வரும் என்று தெரியாது ஆனால் கையில் இருக்கும் தொகைக்கு மீறிய செலவு வந்துவிடும். இப்படி கையில் இருக்கும் பணம் முழுவதும் தங்காமல் கரைந்து கொண்டே இருந்தால் வீட்டில் கெட்ட சக்திகள் இருக்கிறது என்று அர்த்தமாகிறது. இதனை உடைத்தெரிய அந்த காலங்களில் எல்லாம் அடிக்கடி வீட்டில் ஹோமம் செய்வதும், கோவில்களில் யாகம் நடத்துவதும் வழக்கமாக கடைபிடித்து வந்தார்கள். ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் இதையெல்லாம் செய்வதற்கு நேரமில்லை, பணமும் கையில் இல்லை. சரி இதே பலனை நம் வீட்டிலேயே எளிதாக கிடைக்க செய்யக்கூடிய பரிகாரம் ஒன்று உள்ளது. அதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

homam

எல்லா விளக்கையும் நெய் ஊற்றி, திரி போட்டு, தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால் இந்த விளக்கை விளக்கோடு சேர்த்து எரித்து அதிலிருந்து வரும் புகையை வீடு முழுவதும் பரவ செய்து, வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை வெளியே விரட்டி அடிக்க செய்ய வேண்டும். இதனால் வீட்டில் இருக்கும் எல்லா எதிர்மறை ஆற்றல்களும் வெளியேறி, வீட்டில் சண்டை, சச்சரவுகள் குறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஒரு விளக்கை வெள்ளிக்கிழமையில் ஏற்றுவதால் கோ-பூஜை செய்வதற்கு, லட்சுமி நாராயண பூஜை செய்வதற்கு, ஹோமம் நடத்துவதற்கும் சமமாக கருதப்படுகிறது. ஒரு விளக்கில் அதிகப் பலன்கள் கிடைக்க கூடிய இந்த விளக்கிற்கு பஞ்சகவ்ய விளக்கு என்று பெயர். இது இணையதளத்தில் அல்லது பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கிறது. 200 ரூபாய்க்கு குறைவாக 10 லிருந்து 12 விளக்குகள் வரை கிடைக்கப் பெறுகின்றன. வீட்டில் கன்றுடன் கூடிய பசுவின் படம் அல்லது கோமாதா படம் இருப்பது மிகவும் நல்லது.

Panjakavya-vilakku

இதனை வாங்கி வைத்துக் கொண்டு வெள்ளிதோறும் அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது வீட்டின் நடுக்கூடத்தில் அல்லது பூஜை அறையின் நடுவில் ஒரு தாம்பூலத் தட்டை வைத்துக் கொண்டு அதன் மேல் 2 வெற்றிலைகளை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிலையின் மேல் பஞ்சகவ்ய விளக்கு வைத்து அதில் நெய் ஊற்றி கொள்ள வேண்டும். நெய்யைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சகவ்ய விளக்கு பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகிய 5 பசுவின் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.

- Advertisement -

இந்த 5 பொருட்களும் கோமதாவிடம் இருந்து கிடைக்கப் பெறுவதால் இந்த விளக்கை எரிப்பதால் வீட்டில் ஹோமம் செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது. மேலும் ஐந்து பசுக்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய இந்த பஞ்சகாவ்யா விளக்கை எரிப்பதால் உண்டாகும் புகை வீடு முழுவதும் பரவி, தெய்வீக அம்சத்தை ஏற்படுத்தி தரும். இதனால் வீட்டிற்கு அத்துணை தேவர்களும், தெய்வங்களும் வருவதாக ஐதீகம் உள்ளது. தெய்வங்களின் ஆசீர்வாதம் கிடைக்க, வெள்ளிக்கிழமைகளில் இது போல் ஏற்றலாம். விளக்கின் திரி எரிந்த பின்பு விளக்கும் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும்.

panjakavya-vilakku0

விளக்கு முழுவதுமாக எரிந்து முடிந்த பிறகு அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை ஆற வைத்து தனியாக பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். இந்த சாம்பல் தெய்வீக விபூதிக்கு சமமானதாகும். விபூதி தயாரிப்பில் பஞ்சகவ்யமும் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இதனை தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டு செல்வதால் வெற்றி உண்டாகும். வீட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கும் பொழுது இது போல பஞ்சகவ்ய தீபம் ஏற்றி வழிபடுவதால் ஹோமம் செய்வதற்கு இணையாக இருக்கும். நல்ல சுபீட்சமும், நேர்மறை ஆற்றல்களும் பெருகி, வருமானமும் அதிகரிக்கத் துவங்கும்.

இதையும் படிக்கலாமே
குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்கும் ‘அரகஜா’ வேறு எந்த தெய்வங்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்பட்டு போவீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.