- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் பஞ்சம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. வறுமையை நீக்கி வருமானத்தைப் பெருக்க 3 நாட்கள்...

வீட்டில் பஞ்சம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. வறுமையை நீக்கி வருமானத்தைப் பெருக்க 3 நாட்கள் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினாலே போதும்.

- Advertisement -

நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத சமயத்தில் திடீரென்று நம்முடைய வீட்டில் பணத்திற்கு கஷ்டம் வந்து விடும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விடும். நல்ல வேலையில் இருந்தவருக்கு தற்சமயம் வேலையில்லாமல் சம்பளம் இல்லாமல் போய்விடும். சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் பெரிய இடி விழுந்தது போல பணக்கஷ்டம் வாட்டி வதைக்கும். நம்மில் பல பேர் இந்த கஷ்டத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பிலிருந்தே அதிக அளவில் சந்தித்திருப்போம். லாக்டோன் காரணமாக, நோய் தொற்று காரணமாக நிறைய பேரின் வாழ்வாதாரம் நிலைகுலைந்து போய்விட்டது.

sad-man

நிதி நிலைமையில் ஏற்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தாண்டி, எதிர்நீச்சல் போட்டு மீண்டு வந்தவர்கள் நிறைய பேர். ஆனால் இன்னும் சில பேரால் தங்கள் வாழ்வாதாரங்களை தொலைத்துவிட்டு, நல்லவேலை கிடைக்காமல் செய்திருந்த தொழிலில் லாபம் இல்லாமல், கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டிலும் வருமானத்திற்கு வழி இல்லாமல் வீட்டில் பண கஷ்டம் இருந்தால், நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். அந்த காலத்தில் கிராமங்களில் பஞ்சம் தலைவிரித்து ஆடும் போது, ஊரும், ஊர் மக்களும் நன்றாக இருக்க வேண்டும். பஞ்சத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் இந்த பரிகாரத்தை செய்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

poosani-deepam

அந்த பரிகாரத்தை தான் இன்று நாமும் நம்முடைய வீட்டில் செய்யப்போகின்றோம். வெள்ளை பூசணி. திருஷ்டி கழிப்பதற்காக இந்த பூசணிக்காய் பயன்படுத்தப்படும். அதில் சிறிய அளவிலான ஒரு பூசணிக்காயை வாங்கிக் கொள்ள வேண்டும். அதை இரண்டு பாதியாக வெட்டி, ஒரு பாதியை மட்டும் பரிகார தீபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். மற்றொன்று நமக்கு தேவைப்படாது.

- Advertisement -

பூசணிக்காயில் ஒரு பாதையில் உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் நீக்கி விட்டு, அதனுள்ளே இலுப்பெண்ணை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபத்தை நம் வீட்டிலேயே பூஜை அறையில் ஏற்றலாம். கட்டாயம் இந்த தீபத்தை இலுப்பெண்ணையில் தான் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 10 மணிக்கு முன்பு உங்களால் எப்போது இந்த தீபத்தை ஏற்ற முடியுமோ அப்போது வீட்டில் ஏற்றலாம். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் இந்த தீபம் எரிந்தாலும் போதும்.

தீபம் எரிந்து முடிந்த பின்பு பூசணிக்காயை அந்த இடத்தில் இருந்து எடுத்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த தீபத்தை நீங்கள் எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் உங்கள் வீட்டில் ஏற்றலாம். எந்தக்கிழமையில் தீபம் ஏற்ற ஆரம்பித்தாலும் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த தீபம் ஏற்றப்பட வேண்டும். மூன்று நாட்களும் புதியதாக இருக்கும் பூசணிக்காயை வைத்துதான் தீபம் ஏற்றவேண்டும்.

thirusti poosani

ஏற்கனவே ஒருமுறை தீபம் ஏற்றிய பூசணிக்காயை மறுநாள் பயன்படுத்தக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் உங்கள் வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு, பஞ்சத்திற்கு நிச்சயமாக ஒரு விடிவு காலம் பிறக்கும். வருமானத்திற்கு எந்த வழி உங்களுக்கு சரியானதோ, அந்த வழியை அந்த ஆண்டவன் நிச்சயம் உங்களுக்கு காண்பித்து கொடுப்பான் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்