நீங்கள் நினைத்ததை நிச்சயமாக நிறைவேற்றும் அற்புத மந்திரம் இதோ

murugan

பிரபஞ்சம் முழுவதும் ஒரு விதமான மந்திர ஒலி அதிர்வு இருப்பதாக நவீன விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்கின்றனர். இதை பல ஆண்டுகளுக்கு முன்பாக அறிந்தனம் சித்தர்கள் அந்த மந்திரங்கள் உச்சாடனம் என்கிற முறையைப் பயன்படுத்தி, நன்மையான ஒலி அதிர்வுகளை ஏற்படுத்தி அனைத்து உயிர்களும் நன்மைகள் பெறச் செய்தனர். அப்படி சித்தர்கள் உருவாக்கிய அற்புதமான மந்திரங்களில் முருகப்பெருமானுக்குரிய ஒரு சிறப்பான மூல மந்திரம் இது. இம்மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

kantha sasti kavasam lyrics

சரவணபவர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம

அழகனாகிய முருகப்பெருமானின் ஆறு அட்சர எழுத்துக்கள் கொண்ட சரவணபவ மூல மந்திரம் இது. சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும், 108முறை துதிப்பது நல்லது. செவ்வாய்க்கிழமை மற்றும் மாதந்தோறும் வரும் சஷ்டி தினங்களில் முருகனுக்கு செந்நிற மலர்களை சமர்ப்பித்து, செவ்வாழை நைவேத்தியம் வைத்து இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 1008 முறை உரு ஜெபிப்பதால் உங்கள் உடல், மனம் தெய்வீக ஆற்றல் பெறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியுண்டாகும். திருமணத்தடை நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிரிகளே ஏற்படாத அமைப்பு உருவாகும். செல்வ சேர்க்கை ஏற்படும்.

Lord Murugan

சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஒளியில் அவதரித்தவர் முருகப்பெருமான். ஆறு நட்சத்திரங்களாக பிறந்து கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப்பெருமான், கார்த்திகேயன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். அந்த முருகப்பெருமானை வழிபடுவதற்கு சித்தர்கள் உருவாக்கிய அற்புதமான ஆறெழுத்து மந்திரம் சரவணபவ ஆகும். இந்த மந்திரத்தை முறையாக துதித்து வழிபடுபவர்களுக்கு முருகனின் அருளால் வாழ்வில் எல்லா நன்மைகளும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
ஆபத்துகள், நோய்களில் இருந்து காக்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Saravana bhava moola mantra in Tamil. It is also called as Moola mantras in Tamil or Murugan mantras in Tamil or Ethirigal thollai neenga in Tamil or Murugan manthirangal in Tamil.