கஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை சேர்த்து, பணம் வைக்கும் இடத்தில் ஒரு சொட்டு தெளித்தால் கூட போதும்!

theertham

நமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்தை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thulasi theertham

நேரடியாக பரிகாரத்தை முதலில் பார்த்துவிடுவோம். ஒரு சிறிய அளவு செம்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பஞ்ச பாத்திரமாக இருந்தால் கூட, பரவாயில்லை. ஆனால் அந்த பாத்திரம் செம்பாக இருக்க வேண்டும். அதில் தேவையான அளவு பன்னீரை ஊற்றி, அந்தப் பன்னீரில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சளை மட்டும் கலந்து கொண்டால் போதும். உங்களுடைய வீட்டில் வாசனை மிகுந்த உதிரிப்பூக்கள் ஏதாவது இருந்தால்  அந்த தண்ணீரில் போட்டுக்கொள்ளுங்கள். பூஜை ஆரம்பிக்கும் போது இதை உங்களுடைய பூஜை அறையில் வைக்க வேண்டும்.

அதாவது, இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்தாலும் பரவாயில்லை, அல்லது மற்ற நாட்களில் தீபமேற்றி வழிபாடு செய்யும்போது செய்தாலும் பரவாயில்லை. தீபம் ஏற்றுவதற்கு முன்பாகவே ஒரு செம்பு டம்ளரில் இந்த தீர்த்தத்தை தயார் செய்து வைத்து விடுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பூஜையை செய்வது மிக மிக நல்லது.

cash

பூஜை அறையை அலங்காரம் செய்துவிட்டு, தீர்த்தத்தை தயார் செய்து வைத்துவிட்டு, தீபங்களை ஏற்றி வைத்து விட்டு, தீப தூப ஆராதனை காட்டி, முடித்து விட்டு நீங்கள் உங்களுடைய கை நிறைய சில்லரை காசுகளை எடுத்துக் கொள்ளலாம் அல்லது பத்து இருபது ரூபாய் நோட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உங்களது கை நிறைய, காசை வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

நிறைய பணத்திற்கு எங்கே செல்வது என்று நினைக்காதீர்கள்! உங்களுடைய வாழ்க்கை நிறைவாக இருக்க, உங்களுடைய எண்ணங்கள் நிறைவேற உங்கள் உள்ளங்கைகளில் நீங்கள் நிறைவாகத் தான் பணத்தை வைக்க வேண்டும். சில்லறை காசுகலாக இருந்தாலும் போதும். ஒரு நூறு ரூபாய்க்கு சில்லரை காசுகளை வைத்திருந்தாலும் உங்களது உள்ளங்கை நிரம்பிவிடும்.

malligai poo

காசுகளை உள்ளங்கையில் வைத்து மகாலட்சுமியை நினைத்து, கண்களை மூடி நன்றாக வேண்டுதலை வைத்து, தயாராக வைத்திருக்கும் தீர்த்தத்தில் இருந்து, கொஞ்சம் எடுத்து இந்த சில்லறை காசுகளில் தெளித்து உங்களது பீரோவில் வைத்து விட வேண்டும். ‘உங்கள் உள்ளங்கைகளில் காசு நிரம்பி வழிவது போல, உங்களுடைய வாழ்க்கையில் செல்வவளமும், சந்தோஷமும் நிரம்பி இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ளலாம்.

mahalashmi3

அதன் பின்பாக இந்த தீர்த்தத்தை உங்கள் தலையில் தெளித்துக் கொள்ளலாம். உங்கள் வீடு முழுவதும் மூலை முடுக்குகளில் தெளித்து விடுங்கள். வாரம் ஒரு முறை வெள்ளிக் கிழமைகளில் இந்த பூஜையை செய்யலாம். செவ்வாய் கிழமைகளில் இந்த பூஜையை செய்யலாம். மற்ற நாட்களில் இந்த பூஜையை செய்வதனாலும் தவறொன்றுமில்லை.

mahalashmi

சில்லரை காசுகளை மீண்டும் நீங்கள் எடுத்து உங்களுடைய செலவிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அன்றைய தினம், அந்த பணத்தை கொண்டு உங்களது பீரோவில் வைத்தால் மட்டும் போதும். அடுத்த நாளிலிருந்து எடுத்து செலவு செய்து கொள்ளுங்கள். இப்படியாக நிறைவான உங்கள் கையில் நிரம்பி வழியும் அந்த சில்லரை காசுகள், உங்களுடைய வீட்டிலும் பணக் கஷ்டத்தை போக்கி, பணப்புழக்கத்தை பெருக்கி, சந்தோஷத்தை நிரம்பி வழிய செய்யும் சக்தி இந்தப் பரிகாரத்திற்கு உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தீராத கடன் தீர, கேட்ட வரம் உடனே கிடைக்க இந்த நரசிம்ம மந்திரத்தை 3 முறை உச்சரித்தால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.