தீராத கடன் தீர, கேட்ட வரம் உடனே கிடைக்க இந்த நரசிம்ம மந்திரத்தை 3 முறை உச்சரித்தால் போதுமே!

narasimma-mantra

பக்த பிரகலாதனுக்காக அவதாரம் எடுத்த நரசிம்மமூர்த்தி தோற்றத்தில் அகோரமாக காட்சியளித்தாலும் உள்ளத்தில் தாயை போன்றவர் என்கிறது புராணம். நல்லதை ஏற்றுக் கொள்ளும் நம்முடைய மனது சிறிய துன்பம் வந்தாலும் அதனை தாங்கிக் கொள்ள மறுக்கிறது. தவறே செய்யாதவர்கள் இந்த உலகத்தில் இருப்பதில்லை. மனிதனாக பிறந்து விட்டால் ஏதாவது ஒரு தவறை தனக்கே தெரியாமல் அவன் செய்து விடுகிறான். அதற்குரிய துன்பங்களையும் பின்னால் அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

narasimmar-pragalathan1

இப்படியாக தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ நாம் செய்யும் தவறுகளை மன்னித்தருளுமாறு நரசிம்ம பகவானை வேண்டினால் வேண்டிய வரங்கள் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம். பலரும் இன்று தீராத கடன் தொல்லையால் மற்றும் இன்ன பிற துன்பங்களால் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றோம். உங்களுடைய கஷ்டங்கள் யாவும் தீர்வதற்கு நரசிம்மரின் இந்த பிரபத்தி மந்திரத்தை உங்களால் முடிந்த அளவிற்கு காலை நேரங்களில் உச்சரித்து நரசிம்மரை வழிபட்டால் அனைத்து பிரச்சனைகளும் தீரும். அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம் வாருங்கள்.

லக்ஷ்மி நரசிம்மர் படத்தை வீட்டில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். காலையில் குளித்துவிட்டு நரசிம்மர் படத்திற்கு துளசி மாலை சாற்றி, உங்களால் முடிந்த பாலோ, பானகமோ அல்லது வெறும் துளசி தண்ணீரை கூட நைவேத்தியமாக படைத்து நரசிம்மரை வழிபடலாம். காய்ச்சிய பசும்பாலை ஆற வைத்து நிவேதனம் வைக்கலாம். இது நரசிம்மருக்கு மிகவும் பிடித்த நிவேதனம் ஆகும்.

lakshmi-narasimmar

பின்னர் அமைதியாக தியானத்தில் அமர்ந்து கீழ்வரும் இந்த மந்திரத்தை உங்களால் முடிந்த அளவிற்கு 3, 12, 24, 48 என்கிற எண்ணிக்கையில் உச்சரிக்கலாம். பின்னர் தூப, தீப, ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்தபின் நைவேத்திய பிரசாதத்தை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் நரசிம்மருக்கு பூஜை செய்து வந்தால் வேண்டிய வரங்கள் உடனே கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் எண்ணியபடியே ஈடேறும்.

- Advertisement -

நரசிம்ம பிரபத்தி மந்திரம் தமிழ்:
நரசிம்மரே தாய்: நரசிம்மரே தந்தை:
சகோதரனும் நரசிம்மரே: தோழனும் நரசிம்மரே:
அறிவும் நரசிம்மரே: செல்வமும் நரசிம்மரே:
எஜமானனும் நரசிம்மரே: எல்லாமும் நரசிம்மரே:
இவ்வுலகத்தில் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே:
எங்கெங்கு செல்கிறாயோ! அங்கெல்லாம் நரசிம்மரே:
உம்மை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை!!
நரசிம்மரே! உம்மைச் சரணடைகின்றேன்.

yoga narasimmar

இந்த மந்திரத்தை உச்சரித்தால் தீராத கடன் தொல்லைகள் தீரும். குழந்தை இல்லாதவர்கள் தம்பதிகளாக வழிபட பிள்ளை பாக்கியம் உண்டாகும். வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வேலை வேலையும், இருக்கும் வேலையில் எதிர்க்கும் எதிரிகளை துவம்சம் செய்யவும், தடைகள் நீங்கவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் 48 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து நரசிம்ம வழிபாட்டை மேற்கொண்டால் நோய்கள் அகலும். சமஸ்கிருத மந்திரம் தமிழில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பொருள் புரிந்து கூறப்படும் மந்திரத்திற்கு பலனும் அதிகம் என்பார்கள். வேண்டும் வரங்களை பெற இந்த மந்திரத்தை பாராயணம் செய்து பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 மந்திரத்தை இப்படி உச்சரித்தால் ஏழேலு ஜென்மத்தில் செய்த பாவங்கள் எல்லாம் நொடியில் தீருமாம் தெரியுமா? உங்கள் வாழ்விலும் அதிசயங்கள் நடக்க இந்த மந்திரத்தை தினமும் சொல்லுங்கள்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.