இனிவரும் டெஸ்ட் தொடர்களில் இவர்கள் இருவரும் துவக்க ஆட்டக்காரராக இறங்கட்டும் – கம்பீர் விளக்கம்

இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரும், இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த இடது கை பேட்ஸ்மனான கெளதம் கம்பீர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தற்போது உள்ள இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

prithivi

அவர் கூறியதாவது : தவான் மற்றும் விஜய் ஜோடி சமீபகாலமாக பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதனை தொடர்ந்து ராகுல் அந்த இடத்தில் களமிறங்கினார். அவராலும் ஒரு பெரிய இன்னிங்க்ஸை தர முடியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் துவக்கம் என்பது மிகவும் முக்கியம். துவக்கம் சரி இல்லை என்றால் அணியின் எண்ணிக்கையை மட்டுமின்றி ஆட்டத்தின் முடிவினையும் அது மாற்றும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்திய அணியின் இளம் வீரரான பிரிதிவி ஷா முதல் போட்டியிலே சதமடித்து அவரது திறமையினை நிரூபித்தார். இருப்பினும் காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட அவரால் இடம்பெறவில்லை. இது அவருக்கு பெரிய இழப்பாகும். ஏனெனில் வெளிநாட்டு மைதானங்களில் விளையாடும் போது உங்கள் ஆட்டத்திறன் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

agarwal

மேலும் பிரிதிவி ஷாவிற்கு பதிலாக அணியில் இடம்பிடித்த அகர்வால் நன்றாக ஆடுகிறார். எனவே இனிவரும் டெஸ்ட் தொடர்களில் பிரிதிவி ஷா மற்றும் அகர்வால் ஆகியோரை துவக்க ஆட்டக்காரராக இறக்கினால் அவர்கள் நீண்ட நாட்கள் நிரந்தர துவக்க ஜோடியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது என்று கூறி பேட்டியினை முடித்தார்.

இதையும் படிக்கலாமே :

இந்த ஆண்டு IPL போட்டிகள் நடைபெறுவது எந்த நாட்டில் ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்