சதமடித்து தனது அம்மாவிற்கு பிறந்தநாள் பரிசு அளித்த ரிஷப் பண்ட்

rishabh

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணித்தரப்பில் புஜாரா 193 ரன்களை குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக இளம் வீரர் பண்ட் 159* ரன்களை குவித்து களத்தில் இருந்தார்.

pant

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சஹா மற்றும் பார்த்தீவ் ஆகியோரின் காயம் காரணமாக இளம் வீரரான பண்ட்-க்கு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டார் பண்ட். அவர் அடித்த முதல் ரன்னே சிக்ஸர் தான். அதன் பிறகு இங்கிலாந்தில் கடைசி டெஸ்டில் சதமடித்தார்.

அதன் பிறகு இந்த ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்ற பண்ட் நான்காவது மற்றும் கடைசி போட்டியில் தனது இரண்டாவது சதத்தினை இன்று பதிவு செய்தார். மேலும் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் ஆஸ்திரேலிய மண்ணில் அடித்த முதல் சதம் என்ற சாதனையும் அவர் படைத்தார். இந்த சதத்தினை இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவரது அம்மாவிற்கு பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார். அம்மா எனது அனைத்து விடயங்களிலும் எனக்கு பின்னால் என் பலமாக இருப்பது நீங்கள் தான். ஐ லவ் யூ அம்மா. பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார் பண்ட்.

இளம் வீரர் என்பதால் ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் எப்படி விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் எங்கு சென்றாலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் பண்ட். நிச்சயம் இவர் இந்திய அணியின் நட்சித்திர வீரராக வளம் வருவார்.அதற்கு நமது வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே :

நான் நீண்டநேரம் மைதானத்தில் விளையாட காரணம் பேட்ரிக் தான் -புஜாரா

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்