நான் நீண்டநேரம் மைதானத்தில் விளையாட காரணம் பேட்ரிக் தான் -புஜாரா

pujara

ந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல நாள் 303 ரன்களை குவித்தது. நேற்றைய தினத்தினை போன்றே இரண்டாவது நாளும் இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நிதானமாக எதிர்கொண்டு ரன்களை சேகரித்தனர்.

pujara

இரண்டாம் நாளிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணியை வாட்டி எடுத்தனர். குறிப்பாக புஜாரா,பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். இறுதியாக இந்திய அணி 622 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 193 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பண்ட் 159 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் இன்று புஜாரா தனது இந்த நீண்ட நேர ஆட்டத்திற்கு காரணம் இவர்தான் என்று தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார் : அதில், இந்திய அணியின் பிட்னஸ் பயிற்சியாளர் பேட்ரிக் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து எனது ஓட்டத்திற்கு இவரே காரணம் மேலும் அவர் அவரது குடும்பத்தினருடன் இருந்ததை விட என்னோடு தான் அதிக நேரம் செலவழித்து இருக்கிறார். என்று அந்த பதிவில் புஜாரா பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் அடுத்த டிராவிட் என்று அழைக்கப்படும் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாகவும் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

விஹாரி அவுட் இல்லை என்று தெரிந்தும் கொண்டாடிவிட்டோம் – டிம் பெயின்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்