நான் ஆஸ்திரேலியாவில் ஸ்லெட்ஜிங் செய்ததை பற்றி என் அம்மா மற்றும் அக்கா கூறும்போது ஓரே ஷாக் – ரிஷப் பண்ட்

rishabh
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வீரர்கள் பேட்டிங் செய்யும்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் அவ்வப்போது இந்திய அணி வீரர்களை வசைபாடினர். இது இந்த முறை மட்டும் நடப்பதல்ல. எப்போது எல்லாம் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறதோ அப்போது எல்லாம் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களை சீண்டுவது வழக்கம்.

paine

ஆனால், இந்த முறை சென்ற இந்திய அணியில் பல இளம் வீரர்கள் இருந்ததால் அவர்களுக்கு ஆட்டத்தின் மூலமாகவும் மற்றும் வாய்ப்பேச்சின் மூலமாகவும் இந்திய அணி பதிலடி கொடுத்தது. குறிப்பாக ஆக்ரோஷ குணத்திற்கு பேர்போன கேப்டன் கோலி பெயினுடன் நேரடியாக வாய்தகராறில் ஈடுபட்டார். மேலும், இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்டினை வசைபாடினார் பெயின்.

- Advertisement -

ஆனால், இதற்கு சற்றும் தளராத பண்ட் பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தது மட்டுமில்லாமல் பெயின் பேட்டிங் செய்யும் போது தற்காலிக கேப்டன் என்று ஸ்லெட்ஜ் செய்திருந்தார். இதுபற்றி முதன் முறையாக பண்ட் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில், அவர் கூறியதாவது : நான் ஆஸ்திரேலியாவில் ஸ்லெட்ஜ் செய்ததை என் அம்மாவும் அக்காவும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தே நான் இந்தியா திரும்பினேன்.

pant

ஆனால், நான் வீடு திரும்பியதும் என் அம்மா,அக்கா நான் ஸ்லெட்ஜ் செய்ததை பற்றி மகிழ்ந்தனர். மேலும், உன்னை யாரேனும் சீண்டினால் அவர்களுக்கு பதிலடி கொடுக்க தவறாதே என்று என் அம்மா என்னிடம் கூறினார்கள். மேலும் என்னிடம் இருக்கும் திறனை கண்டிப்பாக என் ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்த மட்டுமே நான் விரும்புகிறேன். எனக்கு மற்றவர்களை வசைபாடுதல் பிடிக்காது. இருந்தாலும் என்னை ஒருவர் வசைபாடும் போது நான் அவருக்கு பதிலை மட்டுமே அளிக்கிறேன் என்றார் ரிஷப் பண்ட்

- Advertisement -

எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தோனி என்னை எப்போதும் இந்த பட்டப்பெயர் வைத்தே அழைப்பார் – சாஹல் ஜாலியான பேட்டி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -