முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய்

hair oil to stop hair fall
- Advertisement -

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தலைமுடி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சினையாக திகழ்வதால் அதில் பலரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படி கவனம் செலுத்தும் போது இயற்கையான முறையில் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையை கண்டறிந்து செய்வதன் மூலம் அவர்கள் முடியின் ஆரோக்கியத்தை மேலும் சிறப்படையச் செய்ய முடியும். அந்த வகையில் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் அதிக அளவில் முடி உதிர்ந்தாலும் அந்த முடி உதிர்வை தடுத்து முடியை வளரச் செய்யும் அற்புதமான எண்ணெய் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்களுக்கு ஏற்றார் போல் நம்முடைய வாழ்வியல் மாற்றங்களை நாம் மேற்கொள்ளும் பொழுது முடி உதிர்வு என்பது தடுக்கப்படும். இந்த வாழ்வியல் மாற்றங்களை செய்யும்பொழுது நம் தலைக்கு தேய்க்க கூடிய எண்ணெயிலும் சிறிது கவனம் செலுத்தி வீட்டிலேயே தயார் செய்து தேய்ப்பதன் மூலம் தலை முடி உதிர்தலை தடுத்து நிறுத்தி முடியை வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரச் செய்ய முடியும்.

- Advertisement -

இந்த எண்ணையை தயார் செய்வதற்கு ஒரு கட்டு ஆவாரம் பூ வேண்டும். இதில் இருக்கும் பூ மற்றும் இலைகளை தனியாக பிரித்து அதை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதே போல் கரிசலாங்கண்ணி கீரை ஒரு கட்டு வாங்கி அதையும் சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் மஞ்சள் வெள்ளை என்று இரண்டு வகைகள் இருக்கின்றது. எந்த வகை கிடைத்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்ததாக இதில் ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலையை மற்றும் கருவேப்பிலையை சேர்க்க வேண்டும். இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயம், இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகம், 25 கிராம் கருப்பு எள், ஐந்து கொட்டை நீக்கிய நெல்லிக்காய் இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றக்கூடாது. கீரைகளில் இருக்கும் தண்ணீர் சத்து இதற்கு போதுமான அளவாக இருக்கும்.

- Advertisement -

அரைத்த இந்த விழுதை சிறு சிறு வடைகளாக தட்டி வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். இந்த வடை நன்றாக காய்ந்த பிறகு ஒரு இரும்பு கடாயை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தேங்காய் எண்ணை அரை லிட்டர் ஊற்றி அதில் 50 கிராம் அளவிற்கு வெட்டிவேரை சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக சூடான பிறகு நாம் காய வைத்திருக்கும் இந்த வடையை எடுத்து எண்ணெயில் போட்டு விட வேண்டும். இரண்டு நிமிடம் குறைந்த தீயில் எண்ணெய் கொதிக்க வேண்டும்.

பிறகு இதை மூடி போட்டு மூன்று நாட்களுக்கு வைத்து விட வேண்டும். மூன்று நாட்கள் கழித்து இந்த எண்ணையை வடிகட்டி உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த வடை மற்றும் வெட்டிவேரை மறுபடியும் எண்ணெய் தயாரிப்பதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஒரு முறை தயார் செய்து வைத்தால் இரண்டு முறை உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.

இதையும் படிக்கலாமே: தாடி மீசை வளர டிப்ஸ்

இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் முடி உதிர்வை தடுப்பதோடு மட்டுமல்லாமல் முடியை வேகமாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யக்கூடிய பொருட்களாக திகழ்வதால் அனைவரும் இந்த எண்ணையை பயன்படுத்தி தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.

- Advertisement -