வெளியில் சென்று, வீட்டிற்குள் வந்தவுடன் நம்மில் பலபேர் செய்யும் தவறு இது! இந்த தவறை நீங்க செய்கிறீர்களான்னு பாருங்க. உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் தடைபட இதுவும் ஒரு காரணம்.

நம்முடைய வாழ்க்கை, முன்னேற்றப் பாதைக்கு செல்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நம் ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருந்தாலும், நாம் செய்யக்கூடிய சில தவறுகளின் மூலமாகவும் நம்முடைய முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. வாழ்க்கையை நமக்கு சாதகமாக அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால், சில பாதக செயல்களை நாம் செய்யாமல் இருந்தாலே போதும் என்று சொல்கிறது சாஸ்திரம். அந்த வரிசையில் ஒரு சிறிய தோஷம், சிறிய திருஷ்டியை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thrishti

திருஷ்டி என்று சொன்னாலே நமக்கு தெரிந்தது ஒரு சில திருஷ்டிகள் தான். கண் திருஷ்டி, பொறாமை குணம் கொண்டவர்கள் திருஷ்டி, இப்படியாக ஒரு சில திருஷ்டி வகைகளை கூறலாம். ஆனால் நமக்கு தெரியாத திருஷ்டிகள் 18 வகைகளில் உள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்லப்படுவது கண்திருஷ்டி. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. கண் திருஷ்டிக்கு அடுத்தபடியாக நாம் எல்லோரையும் பாதிக்கக்கூடிய திருஷ்டி, ‘பர திருஷ்டி’ என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்தப் பர திருஷ்டியானது நமக்கு எப்படி ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்வோமா? நாம் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குள் நுழையும் போது, நம் ஆடை மூலமாகவும், நம் காலனி மூலமாகவும் நம் வீட்டிற்குள் வரக்கூடியது தான் இந்த பர திருஷ்டி. இந்த திருஷ்டி ஒரு மனிதனை எந்த அளவிற்கு பாதிக்கும் தெரியுமா?

cheppal

நம்மை சுறுசுறுப்பாக வேலை செய்ய விடாது. எவ்வளவுதான் உழைத்தாலும், அந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியம், அதாவது முன்னேற்றம் என்பது வாழ்வில் இருக்காது. சோம்பேறித்தனத்தை உண்டு பண்ணும். கையில் இருக்கும் காசு தாறுமாறாக எங்கே தான் போகிறது என்றே தெரியாமல் செலவாகிவிடும். உங்களுடைய அறிவு மங்கும். அறிவாளிகளாக இருந்தாலும், அந்தத் திறனை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற சமயோசித புத்தி இருந்தாலும், அதை உங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியாமல், தவிப்பீர்கள். தோல்வியில் துவண்டு நிற்பீர்கள். இத்தனை பிரச்சனைகள் நமக்கு தேவையா? சரி இந்த பர திருஷ்டி நம்மை தாக்காமல் இருக்க என்ன செய்வது?

- Advertisement -

காலையில் வேலைக்கு சென்ற பின்பு அல்லது வெளியிடங்களுக்கு சென்றவிட்டு பின்பு, மாலை வீடு திரும்பியவுடன், வீட்டுக்கு வந்தவுடன் நீங்கள் நேராக குளியலறைக்கு தான் செல்ல வேண்டும். குளியலறைக்குச் சென்று முகம் கை கால்களை கழுவ வேண்டும். முடிந்தால் குளிப்பது நல்ல பழக்கம். உங்களது அழுக்கு ஆடைகளை குளியல் அறையிலேயே கழட்டி போடுவது தான் சரியான முறை. ஒருநாள் பயன்படுத்திய ஆடையை மீண்டும் துவைக்காமல் அடுத்தநாள் பயன்படுத்தும் போது, நமக்கு இந்த பர திருஷ்டி மூலம் கட்டாயம் பிரச்சினை வரத்தான் செய்யும்.

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இப்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் ஜீன்ஸ் பேண்டை வாரம் ஒரு முறைதான் துவைக்கிறார்கள். இப்படி ஒருநாள் அணிந்த ஆடையை துவைக்காமல் மறுநாள் பயன்படுத்துபவர்களுக்கு, வாழ்க்கையில் ஏதாவது ஒருவிதத்தில் தடை வருவதற்கு இந்த பர திருஷ்டியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி ஒரு முறை பயன்படுத்திய ஆடையை துவைக்காமல் அடுத்த முறை பயன்படுத்தும் போது நம்முடைய உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நம் செருப்புகளில் வரக்கூடிய பர திருஷ்டியை நாம் வெளியிலேயே கழட்டி விடுகின்றோம். ஆடையில் இருக்கும் திருஷ்டி தான் நம் வீட்டிற்குள் நுழைகின்றது.

cloth

உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்க வேண்டுமென்றால், வாழ்க்கையில் வரக்கூடிய வாய்ப்புகளை தவற விடக்கூடாது என்று நீங்கள் நினைத்தால், இந்த ஒரு தவறை திருத்திக் கொண்டு பாருங்கள். அழுக்கு சட்டையை கொண்டு வந்து வீட்டிற்குள் மாட்டி வைப்பது கூட தவறுதான். அதை குளியலறையில் ஒரு பக்கட்டில் போட்டு விடுவது தான் சரியான முறை. அதை அடுத்த நாள் துவைத்தாலும் பரவாயில்லை. உபயோகப்படுத்திய அழுக்கு சட்டை பேண்டை, கொண்டுவந்து வீட்டிற்குள் மட்டும் மாட்டி வைத்துக் கொள்ளாதீர்கள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 8 பொருள் எவர் வீட்டில் இருந்தாலும், எட்டுத் திக்கில் இருந்தும் பண வரவு வந்து கொண்டே இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.