இந்த 8 பொருள் எவர் வீட்டில் இருந்தாலும், எட்டுத் திக்கில் இருந்தும் பண வரவு வந்து கொண்டே இருக்கும்.

money

நேற்றோ இன்றோ இந்தப் பரிகாரம் நமக்காக சொல்லப்படவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள், முன்னோர்களுக்கு முன்பாக வாழ்ந்த ராஜாக்கள் இந்த பொருட்களை தங்களுடைய வீட்டிலும், தாங்கள் வாழ்ந்த அரண்மனையிலும், கஜானா பெட்டியில் வைத்து, பூஜித்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த 8 பொருட்கள், நம்முடைய வீட்டில் இருந்தால், எட்டாக்கனியை கூட எட்டிப்பிடிக்க முடியும் என்று சொல்கிறது சில நூல் குறிப்புகள். சாதிக்க முடியாததை கூட சாதித்துக் காட்டும் சக்தி இந்த வாசனை பொருட்களுக்கு உள்ளது.

cash

இன்றைய சூழ்நிலையில் நம் கைகளுக்கு எட்டாத இடத்தில் இருப்பது பணம் ஒன்று மட்டும்தான். எவ்வளவுதான் நம்முடைய வருமானம் உயர்ந்து கொண்டே போனாலும், அந்த வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் உயர்ந்து கொண்டே இருக்கும். ஒரு மனிதனுக்கு மட்டும் எப்போதுமே பணத்தேவையை திருப்தி படுத்தவே முடியாது. எவ்வளவு பொன் பொருள் சொத்து சேர்ந்தாலும், அது அவனுக்கு பற்றாக்குறையில் தான் இருக்கும். ஆக, போதும் போதும் என்ற அளவிற்கு பொன் பொருளை சேர்ப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான்.

வரக்கூடிய வருமானத்தை வைத்துக்கொண்டு, சரியான முறையில் செலவை கட்டுப்படுத்திக் கொண்டு, தன்னுடைய வாழ்க்கையை கடன் வாங்காமல் நடத்திச் செல்லும் அளவிற்கு ஒருவருக்கு சக்தி இருந்தால் அவர்கள் நிச்சயம் பணக்காரர்கள் தான். இது நம்மில் பல பேருக்கு புரிவதே கிடையாது. சரி, தேடல் இருந்தால் தானே மனிதர்கள். உங்களுக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளதா? நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். உங்களுடைய பணத்தேவையை பூர்த்தி செய்யப் போகும் அந்த எட்டு பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வோமா?

vasanai-porul1

திரவிய பட்டை, வெட்டிவேர், அகில்கட்டை, மஞ்சள் கிழங்கு, கோரோசனை, கஸ்தூரி பொடி, ஜாதிபத்திரி, ஜவ்வாது, இந்த பொருட்கள் அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கடைகளில் கேட்டால் 50 கிராம் அளவு முதல் இந்த பொருட்களை கொடுப்பார்கள். இவை அனைத்தையும் வாங்கி, இதில் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் எடுத்து ஒரு மஞ்சள் துணியில் மொத்தமாக வைத்து மூட்டை கட்டி விடவேண்டும். 50 கிராமையும் மொத்தமாக வைத்துவிடாதீர்கள். எல்லாவற்றிலிருந்தும் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் வைத்தால் மட்டும் போதும்.

- Advertisement -

அந்த முடிச்சை மஞ்சள் நூலால், மூட்டையாக கட்டி விடுங்கள். இதை பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். கல்லாப் பெட்டியிலும் வைத்துக் கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு முறை இந்த முடிச்சுக்கு கட்டாயம் தூபம் காட்ட மறந்துவிடாதீர்கள். தூபம் காட்டும் போது இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு கட்டாயம் இரட்டிப்பு பலன் கிடைக்கும். உங்களுக்கான அந்த மந்திரம் இதோ!

cash

ஓம் ஐஸ்வர்ய தேவத்தா தன மாதா யோக ஸ்வதா
இரட்சகி பரிபூரண அனூகிரக தாதர வாவர சுவாஹா

money

இந்த மந்திரத்தை உச்சரிக்க தெரிந்தவர்கள் உச்சரித்து தூபம் காட்டலாம். மந்திரத்தை உச்சரிக்க தெரியவில்லை என்றால், பரவாயில்லை! சாதாரணமாக தூபம் காட்டி விட்டு, மனதார வீட்டில் சுபிட்சம் நிலவ வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் மட்டும் கூட போதும். பணம் கட்டாயம் சேமிப்பில் தங்கும்.

இதையும் படிக்கலாமே
ஒரு கைப்பிடி அவலை உங்கள் வீட்டு பூஜை அறையில் இன்று, இப்படி வைத்தாலே போதும். வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே செல்ல வாய்ப்பே இல்லை.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.