பாரம்பரியமான முறையில் கருவேப்பிலை சட்னி இப்படி மட்டும் சுலபமா வீட்டில் செஞ்சு பாருங்க, மத்த எல்லா சட்னியையும் இனி ஓரம் கட்டிடுவீங்க!

curry-leaves-karuveppilai-chutney_tamil
- Advertisement -

கருவேப்பிலை சட்னி இந்த மாதிரி ட்ரை பண்ணி பாத்தீங்கன்னா கண்டிப்பா இனி அடிக்கடி செய்வீங்க. பாரம்பரியமான முறையில் செய்யப்படும் இந்த கறிவேப்பிலை சட்னி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தலைமுடி உதிராது, கண் பார்வை தெளிவடையும். இப்படி ஏராளமான ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளும் தீரக்கூடிய இந்த சுவையான கருவேப்பிலை சட்னி ரெசிபி நம்ம பாட்டி கைமணம் மாறாமல் செய்வது எப்படி? அப்படின்னு தெரிஞ்சுக்குவோம் வாங்க.

தேவையான பொருட்கள்

பச்சை கருவேப்பிலை – இரண்டு கைப்பிடி, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், பூண்டு பல் – பத்து, சின்ன வெங்காயம் – 15, தேங்காய் துருவல் – அரை கப், வர மிளகாய் – நான்கு, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், வரமிளகாய் – ஒன்று.

- Advertisement -

செய்முறை

முதலில் இரண்டு கைப்பிடி அளவிற்கு கை நிறைய பச்சை கருவேப்பிலை இலைகளை நன்கு சுத்தம் செய்து கழுவி உலர விட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தோலுரித்து சுத்தம் செய்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு அதில் உளுந்து மற்றும் கடலை பருப்பை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதிலேயே மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு தோல் உரித்து வைத்துள்ள பூண்டு மற்றும் தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அப்படியே சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

- Advertisement -

ஓரளவுக்கு நன்கு சுருள வதங்கி வந்த பின்பு காரத்திற்கு ஏற்ப வர மிளகாய் காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் நன்கு வதக்கிய பின்பு துருவிய தேங்காய் அல்லது தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்குங்கள்.

பின் வறுத்த பருப்பையும் போட்டு, கடைசியாக நீங்கள் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள கருவேப்பிலை இலைகளையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அஞ்சு நிமிடம் வதக்கிய பின்பு நிறம் மாறி வர ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறிய பொருட்களை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு நைசாக அரைத்து கெட்டியாக கொண்டு வாருங்கள். பின்பு தாளிக்க அடுப்பில் தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு வர மிளகாயை ஒன்றிரண்டாக கிள்ளி தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறி பாருங்கள். அவ்வளவு சூப்பராக ஆரோக்கியமாகவும், டேஸ்டியாகவும் இருக்கும், நீங்களும் அடிக்கடி செய்ய விரும்புவீங்க.

- Advertisement -