- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பாரம்பரிய பரங்கிக்காய் சாம்பார். ஒருமுறை இவ்வாறு சமைத்து பாருங்கள். அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்

பாரம்பரிய பரங்கிக்காய் சாம்பார். ஒருமுறை இவ்வாறு சமைத்து பாருங்கள். அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்

- Advertisement -

சாம்பார் என்பது வாரத்திற்கு மூன்று முறையாவது அனைத்து வீடுகளிலும் செய்யப்படும் ஒரு குழம்பு வகை ஆகும். இதனை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் என அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு கூட காரம் சேர்க்காமல் சாம்பாரை தான் உணவில் சேர்த்துக் கொடுப்பார்கள். இந்த சாம்பாரை பாரம்பரிய முறையில் பரங்கிக்காயை சேர்த்து எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sambar3

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 4, பரங்கிக்காய் – கால்கிலோ, தனியா – 2 ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, உப்பு – ஒரு ஸ்பூன், பூண்டு – 5 பல், எண்ணெய் – 4 ஸ்பூன், புளி – எலுமிச்சை பழ அளவு, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
கால்கிலோ பரங்கிக்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக் கொண்டு அவற்றை மிக்ஸியில் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

poosanikai

அதன் பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கப் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் சேர்த்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள பரங்கிக்காய், பச்சை மிளகாய். அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 5 பல் பூண்டு இவற்றையும் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பின் மீது வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்துத் தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு, கரைத்து வைத்துள்ள புளி கரைசலையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

onion-rice1

பிறகு இவற்றுடன் குக்கரில் வேக வைத்த பருப்பு மற்றும் பரங்கிக்காயை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதித்து வந்ததும் ஒரு கொத்து கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

idli-sambar2

அவ்வளவுதான் பாரம்பரிய முறையில் மசாலா சேர்த்து செய்த சுவையான பரங்கிக்காய் சாம்பார் தயாராகிவிட்டது. இவ்வாறு ஒருமுறை செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். அருமையான மணத்துடன் அனைவருக்கும் பிடித்த சுவையுடன் சூப்பராக இருக்கும்.

சற்று முன்