பரவை அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் சிறப்புக்கள்

அனைத்தும் சக்தியின் வடிவம். பெண் தெய்வங்கள் அனைத்தும் சக்தியின் வடிவங்களே. கல்வி கடவுளான சரஸ்வதியாகவும், செல்வ கடவுளான லட்சுமியாகவும், வீரமளிக்கும் தெய்வம் பார்வதியாகவும் சக்தியே வணங்கப்படுகிறாள். மனிதனுக்கு நோய்கள் ஏற்படுவது இயற்கை தான். ஆனால் சில நோய்களுக்கு மருந்துகளோடு இறை வழிபாடும் சிறந்த தீர்வாக இருக்கிறது. அப்படி பக்தர்களின் உடல் குறைகளையும், மனக்குறைகளை தீர்க்கும் “பரவை அருள்மிகு சந்தனமாரியம்மன் திருக்கோயில்” பற்றிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Amman silai

பரவை சந்தனமாரியம்மன் கோயில் வரலாறு

சுமார் 500 – 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது பரவை சந்தன மாரியம்மன் கோயில். இக்கோயிலின் பிரதான தெய்வமாக சந்தன மாரியம்மன் இருக்கிறார். புராணங்களின் படி கார்த்தவீர்யார்ஜுன மன்னனால் கொல்லப்பட்ட ஜமதக்னி முனிவரின் மனைவியான ரேணுகா தேவி கணவருடன் சேர்ந்து உடன்கட்டை ஏறிய போது, பெருமழை பெய்து தீயை அணைத்ததுடன், பின்பு வந்த வெள்ளம் ரேணுகா தேவியை அடித்து சென்று ஒரு வேப்ப மரத்தடியில் தள்ளியது. உடலெங்கும் தீக்காயங்கள் பெற்ற ரேணுகா தேவி தனது தீப்புண்கள் விரைவில் ஆற வேப்பிலைகளை ஆடைகளாக அணிந்தாள், உடல் வெப்பம் தணிய கூழ் பருகினாள். தீக்காயங்கள் ஆற அதன் மீது சந்தனம் தடவினாள்.

Mariamman

இதற்கு பின்பு பார்வதி தேவியை குறித்து தவமிருந்த ரேணுகா தேவி முன்பு தோன்றிய பார்வதி அன்னை தனது அம்சத்தையே ரேணுகா தேவிக்கு அளித்தாள். சந்தனம் பூசிய உடலை கொண்டவள் என்பதாலும், பக்தர்களின் துயரங்களை போக்கி அவர்களின் மனதை சந்தனம் போன்று குளிர்விப்பதாலும் ரேணுகா தேவி சந்தன மாரியம்மன் என்று அழைக்கப்படலானாள். இத்தகைய சந்தன மாரியம்மன் கோயில்கள் நாடெங்கிலும் பல உள்ளன.

பரவை சந்தன மாரியம்மன் கோயில் சிறப்பு

இக்கோயிலில் மதுரை, ராமேஸ்வரம், நெல்லை கோயில்களில் இருப்பது போல் சிவபெருமானின் சந்நிதியின் வலது புறம் அம்மன் சந்நிதி இருக்கிறது. கோயில் பிரகாரத்தில் ஐந்து தலை நாகதேவி சந்நிதி இருக்கிறது, இந்த நாகதேவிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் ராகு – கேது தோஷங்கள் நீங்குகிறது. மேலும் திருமண தடைகளை நீக்கி, குழந்தை பாக்கியதையம் தருகிறது. அம்மை நோய், கடும் வயிற்று வலி தீர சந்தன மாரியம்மனை வணங்குவதால் மேற்கூறிய நோய்கள் தீருகிறது என்பது பக்தர்களின் வாக்காக உள்ளது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம், பொங்கல் வைத்தால், கூழ் காய்ச்சுதல் போன்ற முறைகளில் தங்களின் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.

கோயில் அமைவிடம்

- Advertisement -

அருள்மிகு சந்தனமாரியம்மன் திருக்கோயில் மதுரை மாவட்டத்தில் இருக்கும் பரவை என்கிற ஊரில் அமைந்துள்ளது. இங்கு செல்ல மதுரை மாநகரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலை 6 – 1 மணி வரையிலும் மாலை 3 – 9 வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு சந்தனமாரியம்மன் கோயில்
பரவை
மதுரை – 625402

தொலைபேசி எண்

9942647121

இதையும் படிக்கலாமே:
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Paravai santhana mariamman temple in Tamil. It is also called Santhana mariamman kovil madurai in Tamil or Madurai paravai amman kovil in Tamil or Santhana mariamman varalaru in Tamil.