நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் சிறப்புகள்

- Advertisement -

மனிதர்கள் அனைவரும் பெண்ணாகிய தாயின் கருவறையில் பத்து மாதங்கள் வளர்ந்த பின்பே பிறக்கின்றனர். அத்தகைய தாயின் சக்தியை நாம் அளவிட முடியாது. அனைத்து உயிர்களுக்கும் தாயாக சக்தியாகிய அம்பாள் இருக்கின்றாள். நாடெங்கும் பல நூற்றுக்கணக்கான கோயில்கள் அம்மன் தெய்வங்களுக்காக இருக்கின்றன. இருக்கின்றன. அப்படியான ஒரு சக்தி வாய்ந்த அம்மன் கோயிலாக இருப்பது தான் “நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில்”. இக்கோயிலின் பல்வேறு சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Mariamman

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் வரலாறு

சுமார் 500 – 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது நார்த்தமலை முத்துமாரியம்மன் கோயில். இக்கோயிலின் பிரதான தெய்வமாக முத்துமாரியம்மன் இருக்கிறார். அம்பாளுக்கு பூவாடைக்காரி என்கிற மற்றொரு பெயரும் உண்டு. இக்கோயிலின் தல விருட்சமாக வேப்ப மரம் இருக்கிறது. தேவ ரிஷியான “நாரதர்” தங்கி தவம் புரிந்த மலையாக கூறப்படும் இம்மலை மற்றும் ஊர் “நாரதரகிரிமலை” என புராண காலங்களில் அழைக்கப்பட்டு காலப்போக்கில் “நார்த்தாமலை” என்ற பெயரை பெற்றுவிட்டது.

- Advertisement -

தல புராணங்களின் படி இலங்கையில் ராவணனுடனான யுத்தத்தின் போது ராம – லட்சுமணர் மற்றும் காயம்பட்ட வானர வீரர்களை குணமாக்கும் பொருட்டு, இமயத்திலிருந்து ஆகாய மார்க்கமாக சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தூக்கி வந்து கொண்டிருந்த போது, அதிலிருந்து கீழே விழுந்த பாறைகளே இங்கிருக்கும் மலைகள் என கருதப்படுகிறது.சஞ்சீவி மலை போலவே இங்கிருக்கும் மலை குன்றுகளில் மருத்துவ மூலிகைகள் பல நிறைந்துள்ளன.

Amman silai

இந்த கோயிலின் மூலவரான முத்துமாரியம்மன் சில பல வருடங்களுக்கு முன்பு ஒரு வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டு, ஒரு கோயில் அர்ச்சகரால் இங்கு பிரதிஷட்டை செய்து வழிபட்டு வந்த காலத்தில், திருவண்ணாமலை ஜமீன்தார் வம்சத்தில் வந்த மலையம்மாள் என்பவர் அம்பாளின் அருளினாலும், தனது சொந்த முயற்சியாலும் தற்போதுள்ள கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் சிறப்புகள்

புகழ்பெற்ற நார்த்தாமலை கோயில் மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கர் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை என 9 மலைகள் சூழ அமைந்துள்ளது. இந்த நார்த்தாமலை முத்துமாரியம்மன் சந்நிதியில் வடக்கு புறம் அமைக்கப்பட்டிருக்கும் முருகன் யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. பங்குனி மாதத்தில் இக்கோயிலில் நடக்கும் பங்குனி திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுகின்றனர்.

karukathamman

நீண்ட காலமாக பல உடலில் பல வியாதிகள் ஏற்பட்டு அவதிபடுபவர்கள் இக்கோயிலில் “அக்னி” காவடி எடுத்து வழிபட நோய்கள் தீருவதாக பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஆண்டுகள் கழிந்தும் குழந்தை பேறில்லாதவர்கள், இக்கோயிளுக்கு வந்து கரும்பு கொண்டு தொட்டில் செய்து வைத்து அம்பாளை வழிபடுவதால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக அனுபவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

MathuraKaliamman

மாவிளக்கு போடுதல் மற்றும் பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்பாளுக்கு புடவை சாற்றி, கோயிலில் அன்னதானம் செய்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை என்கிற ஊரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு புதுக்கோட்டை நகரிலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கிறது.

கோயில் முகவரி

அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில்
நார்த்தாமலை
புதுக்கோட்டை – 622101

தொலைபேசி எண்

4322 – 221084

9786965659

இதையும் படிக்கலாமே:
நெமிலிச்சேரி அகத்தீஸ்வரர் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Narthamalai muthumariamman temple in Tamil. It is also called Narthamalai amman kovil in Tamil or Narthamalai mariamman kovil in Tamil or Pudukkottai narthamalai temple in Tamil or Narthamalai koil in Tamil or Narthamalai muthumariyamman in Tamil.

- Advertisement -