வீட்டில் பறவைகள் கூடு கட்டுவது இதற்காக தானா? இனி தெரியாமல் கூட அதை கலைத்து விடாதீர்கள் தோஷம் வரும்!

birds-nest-lakshmi
- Advertisement -

ஒரு வீட்டில் பறவைகள் கூடு கட்டுவது என்பது எல்லா வீடுகளிலும் இயல்பாக நிகழும் ஒரு விஷயம் அல்ல. அனைவருடைய வீட்டிலும் கூடுகள் கட்டி பறவைகள் வாழ்வது இல்லை. பாழடைந்த கட்டிடங்கள், நீண்ட நாள் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் போன்ற இடங்களில் பறவைகள் இயல்பாகவே கூடு கட்டுகின்றன. ஆனால் மனிதன் வசிக்கும் ஒரு வீட்டில் பறவைகள் கூடு கட்டுவது என்பது நல்லதா? கெட்டதா? அதனால் வரும் ஆபத்துக்கள் என்ன? அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அதை என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பது போன்ற கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

karaiyan

வீட்டில் கரையான் கூடு, குளவி கூடு போன்ற பூச்சிகள் கட்டும் கூடுகள் இருப்பது மிகவும் ஆபத்தானது. கரையான் கட்டும் கூடுகள் இருக்கும் குடும்பத்தில் வீண் விரயங்களும், நிம்மதி இன்மையும் ஏற்படுவதை உணரலாம். எனவே சிறிதாக அது கூடு கட்டும் பொழுது அவற்றை அகற்றி, அங்கு கொஞ்சம் சிமெண்ட் பூசி விடுங்கள். சிமெண்ட் பூசினாலும் மீண்டும் மீண்டும் கரையான் படையெடுத்தால் அதற்கென பிரத்தியேகமாக விற்கப்படும் லிக்விட்களை பயன்படுத்தி அதனை முற்றிலுமாக ஒழித்து விடலாம்.

- Advertisement -

அந்த வகையில் எந்த வகை பறவை இனமாக இருந்தாலும் அதற்கு எதிர்மறை வைப்ரேஷன்கள் என கூறப்படும் எதிர்மறை ஆற்றல்களை உணரும் சக்தி உண்டு. அதே சமயத்தில் அதனால் நல்ல ஆற்றல்களை கிரகிக்கும் சக்தியும் உண்டு. எங்கு நல்ல ஆற்றல்கள் இருக்கிறதோ! அங்கு மட்டுமே அந்த பறவைகள் கூடுகட்டி வாழும், கெட்ட அதிர்வுகள் இருக்கும் இடங்களில் பறவைகள் நெருங்கக்கூட செய்யாது.

nest1

எனவே ஒருவருடைய வீட்டில் பறவைகள் கூடு கட்டுகிறது என்றால் அங்கு நல்ல அதிர்வுகள் உண்டு என்று அர்த்தம். அங்கு கெட்ட சக்திகள் இல்லாமல் தெய்வீக நடமாட்டம் இருப்பதை உணரலாம். அமைதியான சூழலில் மட்டுமே பறவைகள் கூடு கட்டுகின்றன, எனவே உங்களுடைய வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிறைந்து இருக்கும் பொழுது கட்டாயம் பறவைகள் தானாகவே வந்து கூடுகட்டி வசிக்கும்.

- Advertisement -

அப்படி கட்டும் பறவை கூட்டை எக்காரணம் கொண்டும் உங்கள் கைகளால் நீங்கள் கலைக்கக் கூடாது. அப்படி செய்யும் பொழுது உங்களுக்கு தோஷம் ஏற்படுகிறது. அதனால் தேவையற்ற மன உளைச்சலை சந்திக்க நேரிடும். மேலும் குடும்பத்தில் துன்பங்கள், துர் சம்பவங்கள் போன்றவை ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. எனவே குருவி கூடு போன்ற பறவைகளின் கூட்டை எப்பொழுதும் கலைக்காமல் அப்படியே பத்திரமாக கொண்டு சென்று வேறு ஒரு இடத்திற்கு பாதுகாப்பாக நீங்கள் வைத்து விடலாம்.

nest

பெரிய மரக்கிளைகளின் உச்சிக்கு சென்று பத்திரப்படுத்தி வைத்து விட்டால் அது தோஷத்தை உண்டாக்குவதில்லை. எனவே தவறியும் உங்கள் வீட்டில் கட்டியிருக்கும் பறவைகள் கூட்டைக் கலைத்து விடாதீர்கள்! அது இருந்தால் ஏதாவது ஆபத்து வருமா? என்றெல்லாம் யோசிக்கக் கூட செய்யாதீர்கள். பறவைகள் கூடு கட்டுவது என்பது அதிர்ஷ்டம் தரும் ஒரு நிகழ்வு தான். பறவைகள் மட்டுமல்ல அணில் போன்ற சிறிய வகை விலங்குகள் கூடு கட்டும் பொழுதும் இதே போல் ஒரு பலன்கள் தான் உண்டாகும். எந்த ஒரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் நீங்கள் இருந்தாலே உங்களுக்கு அதிர்ஷ்டம் தானாகவே வந்து சேரும். அதை விடுத்து மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் பொழுது தான் துரதிருஷ்டம் நம்மை தேடி தேடி துரத்துகின்றன.

- Advertisement -