பெத்தவங்க பாவம் பிள்ளைகளை சேருமா? வியக்க வைக்கும் உண்மைகள்.

eman-family

ஒரு மனிதனின் ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டத்தில் முதல் 6 கட்டங்கள் நம்முடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்த நாம் தேர்ந்தெடுக்க கூடிய வகையில் குணம், பொருளாதாரம், விருப்பம், வீடு, வாகனம், படிப்பு, புகழ், பகைவர் என்பன அமைந்திருக்கும். அடுத்த 6 கட்டங்களில் கடவுள் கொடுக்க கூடிய வகையில் வாழ்க்கை துணை, ஆயுள், லாபம், மோட்சம், கர்மா போன்றவை அடங்கி இருக்கும். இவை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாதவை. நம் கையில் எதுவும் இல்லை. நம்முடைய பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கபட்டவை. அதில் கர்மா என்றால் என்ன? நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் மற்றும் பெற்றோர்கள் செய்த பாவங்களால் நமக்கு தீமை உண்டாகுமா? என்பதை பற்றி இப்பதிவில் நாம் விரிவாக காணலாம்.

horoscope

கர்மா என்றால் என்ன?
கர்மா என்பது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்த புண்ணியங்கள், பாவங்கள், நல்லது, கெட்டது இவைகளின் படி அவனை பின் தொடரக்கூடிய வினைகள். ஆதாவது நீங்கள் செய்த பாவத்தின் பலனை நிச்சயம் இந்த ஜென்மத்தில் அனுபவித்து விடுவீர்கள். இல்லையெனில் அதன் தொடர்ச்சியாக மறு பிறப்பு எடுத்து அதிலும் பாவப்பலனை அனுபவிப்பீர்கள். அதே போல் தான் புண்ணியமும். செய்த புண்ணியத்தின் பலனையும் சேர்த்து அனுபவிப்பீர்கள். அதற்காக தான் நல்லதையே செய்யுங்கள் என்று வலியுறுத்தப்படுகிறது.

முன்னோர்கள் செய்த பாவம் பிள்ளைகளை வந்து சேர்வதில்லை என்பதே உண்மையான கூற்று. அவரவர் செய்த பாவங்கள் அவரவரை வந்து சேரும்.

Eman kovil

உதாரணத்திற்கு சிலர் எனக்கு குழந்தை பிறந்த பிறகு தான் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். தொழிலில் நட்டம், வியாபாரத்தில் நட்டம் என்று விரக்தியுடன் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இன்னும் சிலர் இந்த குடும்பத்திற்கு பிரச்சினையே அவர்கள் முன்னோர்கள் செய்த பாவம் தான் அதனால் தான் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்றும் கூறக் கேட்டிருப்போம்.

- Advertisement -

பிள்ளையால் பெற்றோருக்கும், பெற்றோரால் பிள்ளைக்கும் எந்த கெடுபலன்களும் உண்டாவதில்லை. அதற்கு தகுந்தாற்போல் இறைவனால் அவர்களது உறவு இணைக்கப்பட்டிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஒருவருக்கு புத்திர சோகம் உண்டாக வேண்டும் என்பது அவரது கர்மாவின் படி விதியாக இருந்தால் அதற்கேற்றார்போல் அவர்களுக்கு பிறக்க இருக்கும் பிள்ளையின் விதியும் பிள்ளையின் கர்மாவின் படி ஆயுள் குறைவாக இருக்கும். அந்தப் பிள்ளையை தான் இறைவன் இவருக்கு கொடுப்பார்.

இது போல் ஒரு அமைப்பு பெற்றோருக்கும் பிள்ளைக்கும் மட்டுமல்ல எல்லா உறவுகளிலும் இதுபோன்ற ஒரு அமைப்பு தான் உண்டாகியிருக்கும். எடுத்துக்காட்டாக ஒருவரின் ஜாதகத்தில் அவரின் சுய கர்மாவின் படி இந்த வயதிற்கு மேல் வாழ்க்கையில் படாதபாடு பட வேண்டி இருக்கும் என்று இருந்தால், அவர் தன்னுடைய கர்ம பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும் என்று இருக்கும் பட்சத்தில் அவருக்குரிய துணையின் ஜாதகப்படி அவருக்கு ஏதாவது ஒரு ஆரோக்கிய குறை ஏற்பட்டிருக்கும். அவர் பிணியால் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று இருக்கலாம். இது அவரின் கர்ம வினைபடி நடக்கும். இவ்விருவரையும் அந்த இறைவன் இணைத்து இருவரின் கர்ம பலன்களையும் அனுபவிக்கும்படி செய்துவிடுவார் இதுவே ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது.

marriage
Marriage matching

இதிலிருந்து பெற்றோர்களின் பாவங்கள் அல்லது முன்னோர்களின் சாபங்கள் பிள்ளைகளை தீண்டுவதில்லை என்று உணர முடிகிறதல்லவா? நாம் முற்பிறவியில் செய்த பாவ வினைகளை இப்பிறவியில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்பிறவியிலாவது நல்லனவற்றை செய்து மோட்சம் பெற்றுக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் நட்சத்திரத்திற்கு என்ன தானம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Munnorgal pavam in Tamil. Karma continues in Tamil. Karma palangal in Tamil. What is karma in Tamil. Karma palangal in horoscope.