உங்கள் நட்சத்திரத்திற்கு என்ன தானம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

27-stars
- Advertisement -

தானங்கள் என்றாலே சிறப்பு வாய்ந்தது தான். அதிலும் உங்களது நட்சத்திரத்திற்கு என்ன தானம் என்று தெரிந்து கொண்டு உங்களால் முடிந்த வரை ஒரே ஒரு முறை அந்த தானத்தை செய்தால் கூட அது உங்களின் புண்ணியக் கணக்கில் சேர்ந்துவிடும். உங்கள் நட்சத்திரத்திற்கான தானம் என்ன என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

அஸ்வினி-உடல் நிலை சரி இல்லாதவர்களுக்கு மருத்துவம் சம்பந்தப்பட்ட மருந்துகளை தானமாக வழங்கலாம். திருமணத்திற்காக கஷ்டப்படும் பெண்களுக்கு உங்களால் முடிந்த தங்கத்தை தானமாக வழங்கலாம்.

- Advertisement -

பரணி-அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. கோவில்களுக்கு எள் தானமாக கொடுக்கலாம்.

கிருத்திகை-இரும்பு தானம் மிகச் சிறந்தது. வறுமையில் வாடிக் கொண்டு இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த பண உதவியைச் செய்யலாம்.

- Advertisement -

ரோஹிணி-ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த கருவிகளை தானமாக வழங்கலாம். பால் தானம் செய்வது சிறந்தது.

மிருகசீரிடம்-மனவேதனையில் உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து வாருங்கள். கோ தானம் செய்வது மிகவும் சிறந்தது.

- Advertisement -

திருவாதிரை-கோவில்களில் ஏழை மக்களுக்கு அன்னதானம் அளிப்பது நல்லது. எள் தானம் செய்யலாம்.

புனர்பூசம்-முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது சிறந்தது.

பூசம்-கோ தானம் செய்யலாம். அல்லது பசுமாட்டிற்கு உங்களால் முடிந்தவரை தீவனம் வாங்கி கொடுக்கலாம்.

ஆயில்யம்-சிவன் கோவில்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம். ஏழைகளின் திருமண செலவிற்க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

மகம்-ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பதற்கு உதவி செய்யலாம். அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி தானமாக கொடுக்கலாம். எள் தானம் செய்யலாம்.

பூரம்-சிவன் கோவில்களில் விசேஷ பூஜைகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். முடிந்தால் லிங்கத்தை தானமாக அளிக்கலாம்.

உத்திரம்-முதியவர்களுக்கு வஸ்திர தானம் அளிக்கலாம். எள் தானம் செய்யலாம்.

ஹஸ்தம்-முடிந்தால் ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உங்களால் முடிந்த தங்கத்தை வாங்கி தரலாம்.

சித்திரை-ஆதரவற்ற குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.

ஸ்வாதி-சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த மருத்துவ உதவியை செய்யலாம்.

விசாகம்-பாழடைந்த கோவில்களை சீரமைக்கும் பணியில் உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

அனுசம்-உங்களின் கண்முன் யார் கஷ்டப் படுகிறார்களோ அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

கேட்டை-யாகங்களுக்கு தேவையான பொருட்களை கோவில்களுக்கு தானமாக அளிக்கலாம்.

மூலம்-கோவில்களில் மரத்தை நடடுவது சிறந்த பலனைத் தரும். கோவில்களுக்கு தேவையான சிறு சிறு பொருட்களை தானமாக வழங்கலாம்.

பூராடம்-தங்குவதற்க்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

உத்திராடம்-கோவில்களில் இருக்கும் யானைகளுக்கு சாப்பிடுவதற்கு வெல்லம், தேங்காய் தானமாகத் தரலாம்.

திருவோணம்-காது கேளாதவர்கள் யாராவது இறந்தால் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

அவிட்டம்-திறமை இருக்கும். சாதிக்க சாதிக்கமுடியாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.பண உதவியாக இருந்தாலும் சரி. அனுபவ உதவியாக இருந்தாலும் சரி.

சதயம்-அபிஷேகம் சம்பந்தப்பட்ட பொருட்களை கோவில்களுக்கு தானமாக அளிக்கலாம்.

பூரட்டாதி-குழந்தைகள் ஆசிரமத்திற்கு உங்களால் முடிந்த வஸ்திரங்களை தானமாக அளிக்கலாம்.

உத்திரட்டாதி-கைத்தொழில் செய்து வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

ரேவதி-பராமரிக்கப்படாமல் இருக்கும் கோவில்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு நல்லெண்ணெய் வாங்கி கொடுத்தாலும் அது நன்மை தரும்.

இதையும் படிக்கலாமே
12ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

English Overview:
Here we have Enna natchathiram enna thanam in Tamil. Natchathirangalum dhanamum in Tamil. Natchathirathirku uriya dhanam in Tamil. Natchathiram dhanam in Tamil

- Advertisement -