அரசு வேலை, இடமாற்றம், பிடித்த வேலை ஏதுவாக இருந்தாலும் உடனே கிடைக்க காலையில் சூரியனுக்கு இதை செய்தால் போதுமே!

வேலை கிடைப்பது என்பது சாதாரண ஒரு விஷயமாக தான் இருக்கிறது. எந்த வேலையானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் எளிதாக கிடைத்து விடுகிறது. ஆனால் மனதிற்குப் பிடித்த வேலையாக கிடைக்குமா? என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. ஏதோ கிடைத்த வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறோம் என்பதில் ஆத்ம திருப்தி இருப்பதில்லை. மனதிற்கு பிடித்த நல்ல வேலையாக இருக்கும் பொழுது தான், முழு மனதுடன் அந்த வேலையில் ஈடுபாடு காண்பிக்க முடியும். அதைப் பற்றிக் கொண்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறவும் செய்ய முடியும்.

Govt job

ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதற்கு பல்வேறு தீர்வுகள் ஆன்மீகத்தில் இடம் பெற்றுள்ளன. அரசு வேலை கிடைப்பது, சொந்த வீடு கிடைப்பது எல்லாம் சுய ஜாதகத்தின் அடிப்படையில் அமைவது ஆகும். ஜாதகத்தில் இருக்கும் வேலை சம்பந்தப்பட்ட தோஷங்களை நீக்கும் பொழுது இயல்பாகவே உங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை கிடைத்து விடுகிறது. இதற்கு சூரியனுடைய அருள் கட்டாயம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். சூரிய பகவானுடைய அருள் இருந்தால் தான் ஒருவருக்கு வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். ஆக சூரியனை எப்படி வழிபடலாம்? என்பதை தெரிந்து கொள்ள தான் இந்த பதிவு.

சூரிய பகவானுடைய அருள் பெற அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் எழ வேண்டும். சூரியன் தன்னுடைய ஆரஞ்சு நிறக் கதிர்களை வீசிக் கொண்டே, தங்க நிறத்தில் ஜொலித்து, கடலில் இருந்து எழுந்து பூமியில் தென்படும் பொழுது நாம் எழுந்து குளித்து முடித்து இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் நேரம் ஒவ்வொருவரின் வீட்டு காலண்டரிலும் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அதனை குறித்து வைத்துக் கொள்வது நல்லது.

sunrise

சூரியன் உதிக்கும் அந்த நேரத்தில் சுத்த பதத்துடன் மிளகாய் விதைகளை 27 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். மிளகாய் விதைகள் கொண்டு பரிகாரம் செய்யும் பொழுது சூரியனுடைய அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதாக சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது. இத்தகைய சக்தி வாய்ந்த பரிகாரங்களை செய்யும் பொழுது, கிடைக்க வேண்டிய வரங்களும் நமக்கு எளிமையாக கிடைத்து விடுகிறது. பச்சையாக இருக்கும் மிளகாயில் இருக்கும் விதைகளை நீக்கி 27 என்று எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

இதிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து, சூரியன் வரும் பொழுது கிழக்குத் திசையில் நின்று, இடது கையிலிருந்து எடுத்து வலது கை வழியாக பூமியை நோக்கி கையை நீட்டிக் கொண்டு தூவ வேண்டும். அப்படி தூவும் பொழுது, ‘ஓம் சூர்யாய நமஹ’ என்கிற இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். 27 விதைகளுக்கு, 27 முறை இந்த மந்திரங்களை உச்சரித்து பூமியில் தூவி வந்தால் சூரிய பகவானுடைய ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும்.

chilli-seeds

அரசு வேலை கிடைக்க வேண்டுமென்று தவம் இருப்பவர்கள், அரசு வேலை சார்ந்த இடமாற்றங்கள் கிடைப்பதற்கு, அரசு வழி அல்லாத மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையவும் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த பரிஹாரம் சிறந்த பலனை அளிக்கும். உங்கள் தொழில் ஸ்தானமாக இருக்கும் பத்தாமிடம் தோஷம் பெற்றிருக்கும் பொழுது இந்த பரிகாரத்தை செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதனால் நினைத்த வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.