எடுத்த காரியத்தை தடையின்றி முடிக்க உதவும் எளிய பரிகாரம்.

edutha-kaariyam-vetri

சிலர் துவங்கும் காரியத்தில் எப்போதும் சில தடைகள் இருக்கும் அதனால் வேலையை பாதியிலே நிறுத்திவிட்டு புதிதாக வேறொரு வேலையை தொடங்குவார்கள். இத்தகைய நிலையை தவிர்த்திட மிக எளிமையான ஒரு பரிகாரம் உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

புதிய காரியத்தை தொடங்குவதற்கு 48 நாட்களுக்கு முன்பு காலையில் எழுந்து விநாயகருக்கு அருகம்புல் படைத்துவிட்டு மகாகணபதி சகஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்லவேண்டும்.

அதாவது, விநாயகரை அவரது ஆயிரம் பெயர்கள் சொல்லி வணங்கவேண்டும். இதை தொடர்ந்து 48 நாட்கள் செய்யவேண்டும். அதன் பிறகு பிறகு புதிய காரியத்தை தொடங்கினாள் தடையேதும் இல்லாமல் காரியம் வெற்றியடையும்.

மகாகணபதி சகஸ்ரநாம ஸ்தோத்திரம் தெரியாதவர்கள் புத்தகத்தின் உதவியோடு  சொல்லலாம். இதை சொல்வதற்கு வயது வரம்பு கிடையாது அதே போல் ஆண், பெண் என இரு பாலரும் சொல்லலாம்.