பணவரவை அதிகரிக்கச்செய்யும் எளிய பரிகாரங்கள்

money

சிலர் நன்றாக சம்பாதிப்பார்கள் ஆனால் பணம் அவர்களிடம் தாங்காமல் விரையமாகும். இன்னும் சிலர் நன்றாக உழைப்பார்கள் ஆனால் அவர்களிடம் பணம் சேரவே சேராது. இன்னும் சிலருக்கு கடன் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கும். இத்தகைய நிலை எல்லாம் மாறுவதற்கு மிக எளிமையான சில பரிகாரங்கள் கீழே உள்ளன.

money

 

தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபட்டால் பண வரவு அதிகரிக்கும்.

காலையில் எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் போன்றவற்றை பார்த்து வர செல்வ வளம் பெருகும்

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஒரு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டு புடவை சாற்றி வழிபட்டால் செல்வம் பெருகும். அதோடு எவ்வளவு பெரிய கடன் சுமையும் எளிதாக குறையும்.

- Advertisement -

money

 

சித்தர் துதி:

ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக

மேலே உள்ள துதியை தினமும் 9 முறை வீதம் ஒரு வருடம் சொல்லி வந்தால். செல்வம் கொழிக்கும்.

money

பணம் வீண் விரயமாகி கொண்டே இருக்கிறது என்று நினைப்பவர்கள், காலையில் பறவைகளுக்கு இனிப்பு வழங்கினால் வீண் விரயம் கட்டுப்படும்.

காலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டு வாசல் வெளியே சிறிது சக்கரையை தூவி விட்டால் அதை எறும்புகளும் சிறு பூச்சிகளும் உண்ணும். இதனால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பணவரவு அதிகரிக்கும்.