யாருடைய கண் திருஷ்டியும் உங்கள் குடும்பத்தின் மீது விழாமல் இருக்க, இந்த 3 பொருளையும் ஒன்றாக சேர்த்து ஹாலில் வையுங்கள்.

kan-thirusti

நாம், நம்முடைய வீட்டில் தான் இருப்போம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல், குடும்பம் சந்தோஷமாகத்தான் இருக்கும். கணவன் மனைவி, குழந்தைகள், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் பேசி சிரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். மகிழ்ச்சியாக இருக்கும் இந்த குடும்பத்தை, மகிழ்ச்சியான சூழ்நிலையில், யாரேனும் பார்த்துவிட்டால், அவ்வளவுதான். எல்லாம் முடிந்தது.

kan-thirusti-vinayagar

நம்முடைய வீட்டிற்கு வருவார்கள், நம் வீடு இருக்கும் சூழ்நிலையை பார்த்தவுடன், ‘நம்முடைய வீட்டில் இப்படி ஒரு அமைதி இல்லையே, இப்படி ஒரு சந்தோஷமான சூழ்நிலை இல்லையே, என்று வயிற்றெரிச்சல் எல்லாம் பட வேண்டாம், மனதில் சிறு ஏக்கமோ, கலக்கமோ’ அடைந்தால் கூட, அது பெரிய கண்திருஷ்டியாக மாறி, மோசமாக மாறி நம்முடைய வீட்டின் சந்தோஷத்தை நிலை குளைத்து விடும். இது கட்டாயம் நம்மில் ஒவ்வொருவருக்கும் நடக்கக்கூடிய விஷயம்தான்.

இப்படி அடுத்தவர்களுடைய அந்த கலக்கம் நம்மை தாக்காமல் இருக்க, 3 பொருட்கள் தேவை. இது மூன்று பொருளுமே நமக்கு தெரிந்த, அறிந்த பொருட்கள் தான். இதை தனித்தனியாக வைப்பதற்கு பதிலாக, ஒன்றாக எப்படி வைக்க வேண்டும்? உங்கள் வீட்டில் எந்த இடத்தில் இதை வைக்க வேண்டும், என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது ஒரு சுலபமான பரிகாரம் தான். ஆனால் இந்த 3 பொருட்களும் ஒன்றாக சேர்வதன் மூலம், உங்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு அதிகப்படியான பாதுகாப்பு கிடைக்கும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.

salt-and-lemon

அது என்ன 3 பொருட்கள் பார்த்து விடலாமா? கண் திருஷ்டியை போக்கும் கல்லுப்பு, கெட்ட சக்தியை உறிஞ்சி எடுக்கும் எலுமிச்சைபழம், வசிய சக்தி கொண்ட வசம்பு. எப்படி வைப்பது என்பதையும் பார்த்து விடுவோம்? ஒரு சிறிய கண்ணாடி பவல் எடுத்துக்கொள்ளுங்கள். அழகாக இருக்கவேண்டும். அதில் கல் உப்பைக் கொட்டி விடுங்கள். வசம்பை மட்டும், யார் கண்ணுக்கும்  தெரியாமல் கல் உப்பில் புதைத்து வையுங்கள். கல் உப்பின் மேல் அழகான எலுமிச்சை பழத்தை வையுங்கள். சிவப்பு வண்ண ரோஜாவை எலுமிச்சை பழத்தை சுற்றி அழகுபடுத்தி விடுங்கள். சிவப்பு வண்ணத்தில் ரோஜா கிடைக்காவிட்டால், வேறு ஏதாவது ஒரு வண்ணத்தில் பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளலாம் தவறில்லை.

- Advertisement -

பளபளவென்று இருக்கும் கண்ணாடி பாத்திரத்தில், வெள்ளைக் கல்லுப்பு ஜொலிக்கும், அதன்மேல் எலுமிச்சை பழத்தின் மஞ்சள் நிறம் மிகவும் அழகாக இருக்கும். அதில், இன்னும் அதிகப்படியாக அழகு சேர்க்கும் சிவப்பு வண்ண ரோஜா! இப்போது உங்கள் வீட்டிற்குள் யார் நுழைந்தாலும், அவர்களுடைய கண்கள், உங்கள் வீட்டில் இருக்கும் மற்றவர்களையும் பார்க்காது. உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் மற்ற பொருட்களையும் பார்க்காது. அவர்களுடைய கண்கள் எல்லாம் நீங்கள் வைத்திருக்கும் இந்த பவுலின் மீதுதான் இருக்கும்.

vasambu 3

அதோடு மட்டுமல்லாமல் உங்கள் வீட்டுக்கு வருபவர்களின் எண்ணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, அந்த எண்ணமானது எந்த விதத்திலும் உங்களை வந்து சேராமல் பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு கல்லுப்பு, எலுமிச்சைபழம், வசம்பிற்க்கு சக்தி இருக்கிறது.

உங்கள் வீட்டு வரவேற்பறையில் அழகான நாற்காலியில், அலங்கரிக்கப்பட்ட இந்த பொருளை வைத்து பாருங்கள். தினம்தோறும் வாடிய பூக்களை மட்டும் எடுத்துவிட்டு, வேறு பூ வைத்தால் மட்டும் போதும். எலுமிச்சை பழத்தை வாடிய பின்பு மாற்றினால் போதும். உப்பு தூசி அடைந்ததும் மாற்றிவிடுங்கள். பழைய உப்பை தண்ணீரில் கொட்டி கரைத்து விடுங்கள். தொடர்ந்து அதே வசம்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

salt

ஒரு வாரத்திற்கு இந்த முறையை முயற்சி செய்து தான் பாருங்களேன்! யார் உங்கள் வீட்டுக்கு வந்து சென்றாலும், கண் திருஷ்டி படாது. சண்டை சச்சரவு வர வாய்ப்பில்லை.  வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கும். நீங்கள் தொழில் செய்யும் இடத்திலோ, அலுவலகத்திலோ இப்படிப்பட்ட கண்திருஷ்டி பிரச்சனை இருந்தால் கூட, அந்த இடத்தில், இப்படி அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பொருளை வைப்பதில் தவறில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தேவையற்ற உடல் உபாதைகள் பாடாய்படுத்துகிறதா? மருத்துவரிடம் சென்றும் தீர்வு கிடைக்கவில்லையா? ஒருவாட்டி இதை முயற்சி செஞ்சு பாருங்களேன்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kan thirusti lemon. Kan thirusti neenga. Kan thirusti neenga in Tamil. Kan thirusti pariharam Tamil.