பரிகாரங்களை ஏன் செய்யவேண்டும். செய்ய முடியாவிட்டால் என்ன செய்யலாம்

Amman
- Advertisement -

மனிதன் என்பவன் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. அவன் வாழும் இந்த பூமி மற்றும் இன்ன பிற கிரகங்களும் பல லட்ச கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனிலிருந்து வெடித்து சிதறிய கோள்கள் என நவீன விஞ்ஞானம் கூறுகிறது. எனவே மனிதன் மற்றும் அவன் வாழும் இந்த பூமியின் மீதும் விண்ணில் இருக்கும் பிற கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த கிரகங்கள் அனைத்தும் மனிதனின் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அதன் மூலம் அவனது முக்காலத்தையும் அறிந்து கொள்ள கூடிய ஒரு கலை தான் “ஜோதிட கலை”. அந்த ஜோதிடத்தில் பரிகாரங்கள் செய்வது என்பது அனைவருமே கேள்விப்படும் ஒன்று. அது குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்வோம்.parigaaram-10ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையான காலம் வரை நவகிரகங்களும் அவனது வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒருவரின் ஜாதகத்தை ஆராயும் ஜோதிடர்கள் அந்த நபரின் தற்போதைய கிரகநிலைகளை கொண்டு அவருக்கு வரும்காலத்தில் ஏற்படவிருக்கின்ற தீய நிகழ்வுகளை பற்றி எடுத்து கூறுகின்றனர். இந்த தீய நிகழ்வுகள் பெரும்பாலும் பணம் மற்றும் உயிர் சம்பந்தமாகவே இருக்கும். கிரகங்களின் மூலம் கெட்ட பலன்கள் ஏற்படாமல் இருக்க பரிகார சடங்கை மேற்கோள்ளுமாறு ஜோதிடர்கள் வலியுறுத்துகின்றனர்.

நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் நன்மை தீமைகள் நாம் முற்பிறவியில் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் பயன் தான் என வேதங்களை இயற்றிய ஞானிகளின் வாக்காகும். இந்த பரிகாரம் என்பது இறைவனின் பிரதிநிதியாக மக்களுக்கு, அவர்களின் முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் பலன்களை கொடுக்கும் நவகிரகங்களின் கடுமை தன்மையை குறைத்து, நன்மைகளை அதிக படுத்தும் ஒரு செயலாகும்.
parigaaram b
இந்த பரிகாரம் என்பது ஒரு ஆலய இறைவனுக்கு பூஜை மற்றும் வழிபாடாகவோ அல்லது சக மனிதர்களுக்கும் இன்ன பிற உயிர்களுக்கும் செய்யக்கூடிய உதவிகள் மற்றும் தர்மங்களாக இருக்கலாம். இப்படியான பரிகார சடங்குகளை அதன் மீது முழு நம்பிக்கை வைத்து செய்வதால், செய்பவருக்கு ஏற்படக்கூடிய கெடுதலின் தீவிர தன்மையை குறைக்க முடியும். குறிப்பாக பிறருக்கு தான, தர்மங்கள் அளித்தல் போன்ற பரிகாரங்கள் நமக்கு ஏற்படக்கூடிய எத்தகைய ஆபத்துகளையும் நீக்கும் தன்மை கொண்டது.
parigaaramஒரு வேளை நமக்கு ஜோதிட ரீதியாக கணித்து கூறப்பட்ட பரிகாரங்களை நம்மால் செய்ய இயலாமல் போய்விட்டால், நமது குலதெய்வத்தை நம் மனதில் நினைத்து தினந்தோறும் வழிபட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபட வேண்டும். மேலும் நமது முன்னோர்களையும் அவர்களை வழிபடுவதற்குரிய நாட்களில் வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெற வேண்டும். இவையெல்லாவற்றையும் விட தர்மம் நெறி தவறாது வாழ்பவர்களுக்கு ஜோதிடத்தால் கூறப்படும் கேடு காலம், அவர்களுக்கு வராமலேயே கூட நின்று விடும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் வாஸ்து பரிகாரம்

மேலும் பல சுவாரசியமான ஜோதிடம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் இதையும் படிக்கலாமே

- Advertisement -
- Advertisement -