வீட்டில் உள்ளவர்களது கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையாக இருக்க இந்த தீபத்தை ஏற்றினால் போதும். குறிப்பாக மாமியார் மருமகள் ஒற்றுமைக்கு.

family-deepam

நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றாலோ! அல்லது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றாலோ! அந்த வீட்டில் இருக்கும் அனைவரின் கருத்தும் ஒன்று போல இருக்காது. ஒருவர் ஒரு கருத்தினைக் கூற, மற்றவர் அதற்கு நேர் எதிரான மற்றொரு கருத்தை கூறி, வாக்குவாதம் அதிகமாகி கொண்டே இருக்கும். இதனால் பிரச்சனைகளும், பிரிவினைகளும் தான் ஏற்படுகின்றது. அதிலும் கூட்டுக்குடும்பமாக இருந்துவிட்டால் மாமியார் மருமகளின் பிரச்சனை பற்றி சொல்லவே தேவையில்லை. எல்லோருடைய குடும்பத்திலும் மாமியார் மருமகளுக்கு பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது என்பதை கூறிவிட முடியாது. சிலரது வீட்டில் அதிகப்படியான பிரச்சினை இருக்கும். சிலரது வீட்டில் பிரச்சனை இருக்காது. சிலரது வீட்டில் பிரச்சனை இருந்தாலும் அதை அனுசரித்து செல்வார்கள்.

mamiyar-marumagal-sandai

இந்த பிரச்சினைகள் அனைத்துமே எதனால் வருகிறது என்பதை சிந்திக்க வேண்டும். ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாததினாளும், எதையும் வெளிப்படையாக பேசாததினாளும் பிரச்சினைகள் வருகின்றது என்பதை முதலில் வீட்டில் இருக்கும் அனைவருமே புரிந்து கொள்ளவேண்டும். ஏதாவது பிரச்சினையின் மூலம் மனஸ்தாபம் ஏற்படுகிறதா? உடனே மனதில் இருப்பதை கொட்டி தீர்த்து விடுங்கள். அன்றைக்கு நடந்தது அன்றே முடிந்துவிடும். அதை விட்டுவிட்டு, ஒருவருக்கு ஒருவர் நடந்ததை மனதிலேயே வைத்துக்கொண்டு, ‘போன வாரம் நடந்ததை இந்த வாரம் குத்திக்காட்டுவது’ ‘இந்த வாரம் நடந்ததை அடுத்த வாரம் குத்திக்காட்டுவது’ இப்படி மனதில் ஒருவிதமான வஞ்சத்தை வைத்துக்கொண்டே இருந்தால் பிரச்சனை எப்படி வராமலிருக்கும்? குடும்பத்தில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும்,  அன்றன்றைக்கே வரும் பிரச்சினைக்கான தீர்வை, அன்றன்றே முடித்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு இடையே மனஸ்தாபம் வராமல் இருக்க முதல் வழி இது.

இரண்டாவதாக ஒருவரது ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் பலவீனமாக இருந்தால், கண்டிப்பாக மாமியார் மருமகள் இவர்களுக்கும் இடையில் அமைதி இருக்காது. சண்டை தவிர்க்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கும். இந்த சண்டையை முழுமையாக தவிர்க்க முடியாவிட்டாலும், சமாளிக்க இந்த பரிகாரத்தை செய்து வரலாம். வியாழக்கிழமை தோறும் குருவிற்கு கொண்டைக்கடலை மாலை சாத்தியும், செவ்வாய்க்கிழமை சுக்கிரனுக்கு மொச்சை பயிறு படைத்து மனதார வேண்டிக் கொண்டால் நிச்சயம் நல்ல பலன் உண்டு. இந்த பரிகாரத்தை 48 வாரம் தொடர்ந்து செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

agal vilakku

அடுத்ததாக நம் வீட்டிலேயே, 2 மண் அகல் விளக்குகளில் மஞ்சள் குங்குமம் இட்டு, நல்லெண்ணெய் ஊற்றி, அதில் 5 மிளகு, ஒரு சிட்டிகை சீரகம் இவைகளை போட்டு, இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து, தீபம் ஏற்றினால் வீட்டில் சண்டை சச்சரவுகள் குறையும். நம் வீட்டில் மாலை நேரத்தில் காமாட்சியம்மன் விளக்கை ஏற்றிய பின்பு இந்த இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். விளக்கினை ஏற்றி வைத்தபின்பு வீட்டில் எந்தவிதமான சண்டை சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகளும் வரக்கூடாது என்பதை மனதார அந்த இறைவனிடம் நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே
நல்ல காரியத்தை தொடங்குவதற்கு 21 நாட்களுக்கு முன்பு விநாயகரை இப்படி வழிபாடு செய்தால், வெற்றி! வெற்றி! வெற்றி!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kudumba otrumai pariharam in Tamil. Kudumba otrumai Tamil. Kudumba prachanaigal theera. Kudumbathil amaithi nilava. Kudumbathil nimmathi.