9 செவ்வாய்க்கிழமை இதை செய்தால் கணவன்-மனைவிக்குள் வாழ்நாள் முழுவதும் பிரச்சனையே வராது தெரியுமா?

nagar-durga

கணவன் மனைவி என்றாலே சக்தியும், சிவனும் போலல்லாமல், பாம்பும், கீரியும் போல் நடந்து கொள்வது பல வீடுகளில் வழக்கமான ஒன்று தான். கணவன் மனைவி பிரச்சனை என்பது சாதாரணமாக இருந்தாலும் இன்று இருக்கும் சூழ்நிலையில் பலருடைய வாழ்க்கை தடம் மாறி போகவும், திசை திரும்ப செய்யவும் வழி வகுக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக எழுந்தருளி இருக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட பிரிவு என்று சென்று விடாமல், அதற்குரிய நிரந்தரத் தீர்வை தேடுவது தான் ஆரோக்கியமான வாழ்க்கையாக இருக்கும்.

nagaraja

ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கணவன் மனைவி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணலாம். அதை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். பிரசித்தி பெற்ற கோவில்களில் இருக்கும் நாகர் சிலைக்கு அபிஷேகம் செய்தால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிணக்குகள் தீரும் என்பது ஐதீகம். அதிலும் இரண்டு நாகங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி கொண்டிருப்பது போல இருக்கும் சிலைக்கு அதீத சக்திகள் உள்ளன. அந்த சிலைக்கு 9 வாரங்கள் செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால வேளையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். கணவன்-மனைவி யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்து பார்க்கலாம்.

இரண்டு பாம்புகள் பின்னி கொண்டிருக்கும் நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் மற்றும் இளநீர் அபிஷேகம் செய்ய வேண்டும். இதற்கான அனுமதி சீட்டை முதலிலேயே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அபிஷேகம் செய்த பின்னர் சிலைக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அரளிப்பூ மாலை சாற்றி புதிதான அகல் விளக்கு இரண்டில் சுத்தமான நெய்யை ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபமேற்றி மனதார வழிபாடு செய்ய வேண்டும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அல்லது கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும், மனம் ஒருமித்த கருத்து வேறுபாடு இல்லாத வாழ்வைத் தருமாறு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

durga

அதே போல இந்த பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் வேறு ஒன்றையும் செய்து பார்க்கலாம். ராகு கால வேளையில் துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் 9 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். துர்க்கை அம்மனுக்கு உகந்த நிறம் சிகப்பு மற்றும் மஞ்சள். மஞ்சள் நிற மலர்களைக் கொண்டு நீங்களே கைகளால் தொடுத்த மாலையை தயார் செய்து கொள்ளுங்கள். அதனை உங்கள் கைகளாலேயே அம்பாளுக்கு சாத்தி விட வேண்டும். பின்னர் இரண்டு எலுமிச்சை தீபம் ஏற்றி மனதார வழிபட வேண்டும்.

- Advertisement -

9 வாரங்கள் நிறைவடைந்த பின் கடைசி வாரத்தில் துர்க்கை அம்மனுக்கு சிகப்பு நிற அல்லது மஞ்சள் நிற வஸ்திரம் வாங்கி கொடுக்க வேண்டும். வஸ்திரத்துடன் மங்கல பொருட்களாக இருக்கும் வெற்றிலை, பாக்கு, பூ, பழம், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வளையல் போன்றவற்றையும் வாங்கி கொடுக்க வேண்டும். இப்படி ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்து பரிகாரத்தை நிறைவு செய்யும் பொழுது கணவன்-மனைவிக்குள் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அவைகள் நீங்கிவிடும். பிரிந்து இருக்கும் தம்பதிகளும் மீண்டும் ஒன்று இணைவார்கள் என்பதே பக்தர்களுடைய நம்பிக்கை.

marraige-couple

கடவுள் வழிபாடு ஒரு புறமாக இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் நீங்க ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது ஒன்றே சிறந்த பலனாக இருக்கும். பேசினால் சண்டை வரும் என்று பேசுவதையே தவிர்த்து விடுவது பிரிவை தான் உண்டாக்கும். சண்டை வந்தாலும் பரவாயில்லை என்று உங்கள் தரப்பு நியாயங்களை தொடர்ந்து முன் வைத்து பாருங்கள். ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் கணவன் அல்லது மனைவி உங்களை புரிந்து கொள்வார்கள். கூடவே இறைவழிபாடும் தம்பதிகளின் ஒற்றுமைக்கு சிறப்பான தீர்வை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
நாளை தை அமாவாசை! நீங்கள் செய்யும் பூஜையில் இந்த 1 பொருள் இருந்தாலே போதும். முன்னோர்கள் முழுமனதோடு நீங்கள் செய்கின்ற பூஜையை ஏற்றுக் கொள்வார்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.