உங்களுக்கு தடையின்றி அதிக பணவரவு உண்டாக இதை செய்யுங்கள்

pournami

பணம் அனைவருமே சம்பாதிக்கத்தான் செய்கின்றனர். ஆனால் பணக்காரன் அல்லது கோடீஸ்வரன் என்கிற தகுதியை அடைவது ஒரு சிலர் மட்டுமே. இதற்கு கடின உழைப்பு இருப்பதோடு, தெய்வத்தின் அனுக்கிரகமும் நமக்கு இருந்தால் மட்டுமே மிகப்பெரிய அளவில் செல்வந்தனாக மாற முடியும். சாமானிய நிலையில் இருக்கும் மனிதர்களும், மிகுந்த செல்வம் ஈட்டி வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க முன்னோர்கள் பல ஆன்மீக பரிகாரங்களை கூறியுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு எளிய பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பௌர்ணமி தினத்தன்று இரவு 7 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக 6 தரமான எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு, எலுமிச்சை பழங்களின் தோல் மீது பச்சை நிற மை நிறைந்த பேனாவைக் கொண்டு “வரும் தரும் மிகும் வரும்” என்ற மந்திரத்தை மனதில் உச்சரித்தவாறே, அந்த எலுமிச்சம் பழங்கள் முழுவதும் சிறு இடைவெளி கூட இல்லாமல் எழுத வேண்டும்.

பின்பு இந்த ஆறு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு, ஏதாவது ஒரு தெருமுனையில் அந்தப் பழங்களை வீசி விட்டு, திரும்பி பார்க்காமல் உங்கள் வீட்டிற்கு வந்து சேரவேண்டும். எக்காரணம் கொண்டும் தெருவுக்கு நடுவில் இந்த எலுமிச்சை பழங்களை போடக்கூடாது. வீட்டிற்கு திரும்பியதும் உங்கள் முகம் மற்றும் கை கால்களை கழுவிக் கொண்டு, இரண்டு சிறிய வெள்ளை தாள்களை எடுத்துக் கொண்டு, மேலே கூறப்பட்ட “வரும் தரும் மிகும் வரும்” என்கிற மந்திரத்தை பச்சை நிற மை கொண்ட பேனாவை கொண்டு ஆறு முறை எழுத வேண்டும்.

elumichai-palam

அந்த இரு காகிதங்களில் ஒன்றை மடித்து உங்கள் பணம் வைக்கும் பர்ஸ் அல்லது பைகளில் வைத்துக் கொள்ளவேண்டும். மற்றொரு தாளை லேமினேட் செய்து, உங்கள் அறையிலோ அல்லது பணம் வைக்கும் அலமாரியிலோ ஒட்டி வைத்துக்கொள்ளலாம். தினமும் காலையில் குளித்து முடித்த பிறகு, உங்கள் பர்ஸ் பணப்பையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த மந்திர காகிதத்தில் இருக்கின்ற மந்திரத்தை ஐந்து நிமிடங்கள் மனதிற்குள் துதிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை மேற்கூறிய முறையில் செய்பவர்களுக்கு விரைவிலேயே பொருள்வரவு அதிகரிப்பதை காணலாம். வீண் விரயங்கள் தடுக்கப்பட்டு செல்வசேகரம் அதிகரிக்கும். நீங்கள் மந்திர காகிதத்தை வைக்கும் பர்ஸ் அல்லது பணப்பை போன்றவை விலங்குகள் தோலினால் செய்யப்பட்டதாக இருக்க கூடாது. மேலும் அவை பச்சை நிற வண்ணத்தில் இருப்பது பலனை விரைவில் உங்களுக்கு தர வழிவகை செய்யும்.

இதையும் படிக்கலாமே:
நினைத்தது நிறைவேற இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pariharam to get rich in Tamil. It is also called as Selvam sera valigal in Tamil or Tantrika pariharangal in Tamil or Elumichai pariharangal in Tamil or Migundha selvam sera in Tamil.