ஒரு பிரச்சனைக்கு பலவகையான பரிகாரங்கள் சொல்லப்படுகின்றது. இதில் எதை தான் செய்வது? என்ற குழப்பம் உங்கள் மனதில் உள்ளதா?

praying women
- Advertisement -

பரிகாரங்களை படிப்பவர்களுக்கும், செய்பவர்களுக்கும், மனதில் இருக்கக்கூடிய ஒரு பெரிய குழப்பம் இதுதான். ‘ஒரு பிரச்சினைக்கு, ஒரு பொருளை வைத்து பலவகையான பரிகாரங்கள் சொல்லப்படுகிறது!, அந்தப் பரிகாரங்களில் நாம் எதைத் தேர்ந்தெடுத்து செய்வது’? நம்முடைய சாஸ்திரத்தில் ஒரே வகையான பிரச்சினைக்கு பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது, எதற்காக என்றால், சில பேருக்கு சில பரிகாரங்கள் கைமேல் பலன் கொடுக்கும். சில பரிகாரங்கள், சில பேருக்கு, கைமேல் பலனை கொடுக்காது. அதற்கு அவரவருடைய சூழ்நிலையும், ஜாதக கட்டத்தில் அமைந்திருக்கும் அமைப்பும் தான் காரணமாக இருக்க முடியும்.

poojai

எடுத்துக்காட்டாக, கண் திருஷ்டியை எடுத்துக்கொள்வோம். சில பேருக்கு உப்பு சுற்றிப் போட்டால், உடனே அவருக்கு இருக்கக்கூடிய கண் திருஷ்டி நீங்கி விடும். சில பேருக்கெல்லாம் கற்பூர திருஷ்டி எடுக்கவேண்டும். சில பேருக்கு எலுமிச்சை பழ திருஷ்டி எடுக்க வேண்டும். சிலபேருக்கு எல்லாம் கண் திருஷ்டியே ஏற்படாது. திருஷ்டி கழிப்பு திலேயே இத்தனை பிரச்சனை.

- Advertisement -

எதோ ஒரு உடல் உபாதைக்காக, மருத்துவரிடம் செல்கின்றோம். அவர் முதல் முறை ஒரு மருந்தைக் கொடுத்து 3 நாள் பரிசோதித்து பார்ப்பார். அந்த மரத்திலேயே உடல்நிலை சரியாகி விட்டால், நம்முடைய நல்ல நேரம்! சிலபேருக்கு மருத்துவரிடம் முதல் முறை சென்றால் உடல்நிலை குணமாகவே ஆகாது. மீண்டும் மீண்டும் மருத்துவரை அணுகி, மருந்தை மாற்றி மாற்றி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

sad

மருந்தை மாற்றி மாற்றி பரிசோதனை செய்து, மருத்துவர் எப்படி தீர்வினை சொல்கிறாரோ, அதேபோல்தான் ஆன்மீக ரீதியான பரிகாரங்களும். ஒரு காய்ச்சலுக்கு crocin, paracetamol, fepanil, dolopar என்று பல மருந்துகள் இருக்கும்போது, ஒரு பிரச்சனைக்கும் பல பரிகாரங்கள் இருப்பதில் என்ன தவறு?

- Advertisement -

உங்களுக்கு ஒரு பரிகாரத்தை செய்து, பலன் அளித்து விட்டது என்றால், அந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வரலாம். உங்களுக்கு எந்த பரிகாரங்கள், பலன் அளிக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டிய திறமை உங்களிடத்தில் தான் உள்ளது. பரிகாரங்கள் உங்களுக்கு பலனளிக்காத பட்சத்தில், வேறு ஒரு பரிகாரத்தை நாடுவதில் தவறு ஒன்றும் கிடையாது.

bhagavathi poojai

சில பேரது மன உறுதி, ஒருமுறை நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்யும் போதே பலனைத் தரும். சில பேரது நம்பிக்கையின்மை, எத்தனை முறைதான் பரிகாரத்தை செய்தாலும், எத்தனை விதமாக பரிகாரத்தை செய்தாலும், பலனை அளிக்காது. ‘இந்த பரிகாரத்தை செய்தால் அதிக பலன் கிடைக்குமா? அந்த பரிகாரத்தை செய்தால் அதிக பலன் கிடைக்குமா? என்று உங்களது மனதை அலைபாயவிடாமல், உங்களுடைய பிரச்சனைக்கு சரியான பரிகாரம் எது என்பதை தேர்ந்தெடுங்கள்.’ மன உறுதியோடு தொடர்ந்து கடைபிடித்து வாருங்கள்! கட்டாயம் அந்த பரிகாரம் கை கொடுக்கும். கை கொடுக்காத பட்சத்தில் உங்களுடைய பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, உங்களது கிரகங்களுக்கு பரிகாரங்களின் சக்தி இன்னும் வலிமையாக இருக்க வேண்டும் என்றால், மட்டும் அடுத்த பரிகாரத்திற்கு சென்றால் போதும்.

- Advertisement -

poojai arai

இப்படிப்பட்ட பரிகாரங்களை செய்தும் உங்களுடைய பிரச்சனை தீர்வுக்கு வரவில்லை என்றால், உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தை கொண்டு போய், உங்கள் குடும்ப ஜோசியர் இடம் காட்டி அதற்கான, சிறப்பான பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

சிலபேருக்கெலாம் வீட்டில் இந்த மூலையில் இருக்கும் பொருளை தூக்கி, அந்த மூலையில் வைத்தாலே யோகம் பிச்சிக்கொண்டு கொட்டும். சிலபேர் வீட்டையே இடித்து கட்டினாலும் யோகம் என்பது வராது. அது அவரவருடைய பிறப்பில் இருக்கக்கூடிய கர்மவினை. இந்த இடத்தில் கட்டாயம் ஒரு கேள்வி எழும். ‘பிறகு எதற்கு பரிகாரம்? பரிகாரங்களை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, கர்மவினையை அனுபவித்து விட்டு செல்லலாமே என்று!’ அப்படி கிடையாது, கர்ம வினையால் ஏற்படுகின்ற பிரச்சனையின் தாக்கத்தை குறைப்பதற்காகவே பரிகாரம் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

vasthu

இவ்வளவு ஏன்? பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் கடவுள்களுக்கே எத்தனை அவதாரம்? அதோடு மட்டுமல்லாமல், அவரவருடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு தனிப்பட்ட கடவுள்களை வழிபடுகின்றோம். முருகர், விநாயகர், அம்மன், சிவன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பரிகாரங்களை செய்தாக வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பரிகாரங்களை செய்யுங்கள். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு பரிகாரங்கள் நிச்சயம் பலன அளிக்காது.

praying-god

பரிகாரங்களில் பலவகைப்பட்ட பரிகாரங்கள் இருந்தாலும், ஒவ்வொரு பரிகாரமும், ஒவ்வொருவருக்கு பலனளிக்கக் கூடிய பரிகாரங்கள் தான். ‘பரிகாரத்தை செய்து விட்டோம், இதனால், பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து விடும்’ என்ற நேர்மறை ஆற்றல் ஒன்று போதும். பிரச்சனைகளுக்கு தீர்வு காண, இதற்கு நிறைய பேருடைய மனசாட்சியை சாட்சியாக இருக்கும், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த தவறை மட்டும் மறந்தும் செய்து விடாதீர்கள்! சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலை வரும் ஜாக்கிரதை!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -