சமயலறையில் இதை செய்தால் பிசுபிசுப்பும் இருக்காது பூச்சிகளும் இருக்காது.

நம்மில் பலபேர் வீடுகளில் சமையலறையில், கரப்பான் பூச்சியின் பிரச்சனை அதிகமாகவே இருக்கும். இதுதவிர சில வீடுகளில் எறும்புகள் அதிகமாக வந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக மிக்ஸி, கிரைண்டர் இவைகளின் சந்துக்குள் போய், பூச்சிகள் தங்கிவிடும். எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அதில் இருக்கும் பூச்சிகளை நிரந்தரமாக நம்மால் வெளியேற்றவே முடியாது. அப்படி வெளியேற்றினாலும், திரும்பத் திரும்ப அந்த பூச்சிகள் வந்து அந்த இடத்திலேயே தங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்தப் பிரச்சினைக்குச் சுலபமான ஒரு நிரந்தர தீர்வைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kitchen

இதற்கு தேவையான பொருட்கள் சமையலுக்கு பயன்படுத்தும் வெள்ளை வினிகர், பாத்திரம் தேய்க்க பயன் படுத்தும் எலுமிச்சை வாசம் உள்ள லிக்விட், (pril liquid, vim liquid) உங்கள் வீட்டில் எதை பயன்படுத்துவீர்களோ அதையே எடுத்துக்கொள்ளலாம். சமையலுக்காக பயன்படுத்தும் சோடா உப்பு. ஒரு ஸ்ப்ரே பாட்டில்.

உங்கள் கையில் வைத்திருக்கும் ஸ்ப்ரே பாட்டிலில், ஒரு டம்ளர் அளவு வினிகரை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன்பின்பு அரை டம்ளர் அளவு தண்ணீர், ஒரு டேபிள்ஸ்பூன் அளவு பாத்திரம் தேய்க்கும் லிக்விட், ஒரு டேபிள்ஸ்பூன் அளவு சோடா உப்பு. இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக குலுக்கி, கலந்து கொள்ளுங்கள்.

spray

அதன்பின்பு, பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும், ஸ்க்ரப்பர் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பு ஸ்க்ரப்பர் பயன்படுத்தக்கூடாது. கீறல் விழ வாய்ப்பு உள்ளது. அந்தச் ஸ்கரப்பரை முதலில் தண்ணீரில் நனைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு பல் தேய்க்கும் பேஸ்ட் எடுத்து, ஸ்கரபரில் பரவலாக தடவி, அந்தப் பேஸ்ட்டை கொண்டு, முதலில் உங்கள் வீட்டில் அழுக்குப் படிந்து இருக்கும் மிக்ஸி, கிரைண்டர் இவைகளை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்யும் பட்சத்தில் மேலே படிந்திருக்கும் அழுக்கு சுத்தமாக நீங்கி விடும்.

அதன் பின்பாக நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் ஸ்பிரேவை அடித்து, காட்டன் துணியை வைத்து துடைத்தால் போதும். எண்ணை பிசுபிசுப்பு உள்ளே தங்கியிருக்கும் பூச்சிகளும், இந்த வாசத்திற்கு வெளியே வந்துவிடும். இந்த வாசம் உங்கள் சமையலறையில் இருக்கும் வரை பூச்சிகள் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை.

stove

இந்த ஸ்பிரே வை பயன்படுத்தி உங்கள் வீட்டின் கேஸ் ஸ்டவ், சமையல் மேடை, சமையலறை டைல்ஸ், இவை அனைத்தையும் சுத்தம் செய்யலாம். மாதத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ இப்படி செய்து வரும் பட்சத்தில், இந்த வாசம் நிரந்தரமாக உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும். உங்களது சமையலறை, எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி, வாசமாக கரப்பான்பூச்சி இல்லாத சமையலறையாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக சன்ஃபிளவர் ஆயில் பயன்படுத்தும் வீடுகளில் எண்ணெய் பிசுபிசுப்பு மிக மிக அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நல்லெண்ணெய், கடலெண்ணெய் பயன்படுத்துபவரது வீட்டில், பிசுபிசுப்பு குறைவாகதான் இருக்கும்.