மகாலட்சுமிக்கு இந்த 1 பூ கொண்டு அர்ச்சனை செய்தால் அள்ள அள்ள குறையாத செல்வம் சேருமாம்!

lakshmi-parijatham

மகாலட்சுமிக்கு வாசனை மிகுந்த பூக்களை கொண்டு அர்ச்சனை செய்தால் நம்முடைய இல்லங்களில் செல்வ வளத்திற்கு குறைவிருக்காது என்பது நம்பிக்கை. ஏனெனில் மகாலட்சுமிக்கு வாசம் நிறைந்த பொருட்கள், மலர்கள் அத்தனையும் பிடிக்கும். நல்ல வாசனை இருக்கும் இடங்களில் எல்லாம் மகாலட்சுமி குடியிருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கிறது. கோவிலுக்குள் போன உடனேயே தெய்வீக மணம் கமழும். இதனை கவனித்தது உண்டா?

lakshmi-devi

அது போல நம் வீட்டிலும் சுத்தமும், வாசனையும் ஆக வைத்துக் கொண்டால் நிச்சயம் செல்வம் பெருகும். இந்த மலரை கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது மேலும் மேலும் செல்வம் பெருகிக்கொண்டே போகும். அப்படி அற்புதம் வாய்ந்த சக்தி மிகுந்த மலர் என்ன? அதன் புராணப் பின்னணி என்ன? என்பதைக் கேட்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கும். அதை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பாற்கடலை கடையும் பொழுது அதிலிருந்து வந்த பொருட்களில் இந்த மலரும் வந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த மலரை இந்திரன் தேவலோகத்தில் கொண்டு போய் வைத்து கொண்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகிறது. இம்மலரை மாலையாக தொடுத்து நாரதர் ஒரு முறை கிருஷ்ணருக்கு கொடுக்க சென்றார். ஸ்ரீ கிருஷ்ணருக்கு பாமா, ருக்மணி என்கிற இரு மனைவிகள் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.

அதில் அந்த மாலையை ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மணிக்கு கொடுத்து விட்டார். இதனால் தனக்கு கிடைக்கவில்லையே! என்று பாமாவிற்கு மிகவும் வருத்தம். அவரின் வருத்தம் தீர்க்க தேவலோகத்திற்கு சென்று அந்த மலருக்காக போர் புரிந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. பின்னர் ஒரு வழியாக அந்த மலர் செடியையே பாமாவிற்கு கொண்டு வந்து கொடுத்தாராம் கிருஷ்ணர். அந்த அளவிற்கு விசேஷ சக்திகளை கொண்டுள்ளது இம்மலர். இதற்கு ‘பாரிஜாதம்’ என்கிற பெயர் உண்டு.

- Advertisement -

பூமியில் அபூர்வமான மலர் செடிகளில் பாரிஜாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. இம்மலரில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பாரிஜாத மலரைக் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து வந்தால் செல்வ வளம் பெருகுவது உறுதி. உங்களுக்கு பாரிஜாத மலர் இருக்குமிடம் தெரிந்தாலோ அல்லது உங்கள் வீட்டில் பாரிஜாத மலர் இருந்தாலும் கட்டாயம் அதனை கொண்டு வந்து விடுங்கள். அதிர்ஷ்டம் தரக்கூடிய அம்மலர் தெய்வீக சக்திகளை உள்ளடக்கியுள்ளது.

parijatham

ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்க மகாலட்சுமிக்கு பாரிஜாத மலர் கொண்டு அர்ச்சனை செய்து வர நிவாரணம் உண்டாகும். வீட்டில் பாரிஜாத மலர் வளர்ப்பவர்கள் அதனை வடகிழக்கு அல்லது தென் கிழக்கு மூலையில் வைத்து வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும். சுத்த பால் போல வெண்மை நிறத்தில் இருக்கும் பாரிஜாத மலர் அனைவரையும் எளிதாக கவர்ந்து விடும். இதனை தேவலோக மலர் என்றும் கூறுவது உண்டு. தேவலோகத்திலிருந்து பூலோகம் வந்த பாரிஜாத மலர் மனிதர்களுக்கு வாஸ்து தோஷத்தை போக்க கூடிய ஆற்றல் கூட பெற்றுள்ளது.

parijatham-plant3

உங்கள் வீட்டின் வாஸ்து தோஷம் நீங்க பாரிஜாத மலரை வளர்த்தால் போதும். கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இந்த மலருக்கு உண்டு என்பதால் மருத்துவத்திலும் இம்மலர் தன் பங்களிப்பை கொடுக்கிறது. தேவலோக மலரான பாரிஜாத பூவைக் கொண்டு வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து, அவரின் மூல மந்திரத்தை உச்சரித்து வாருங்கள் எப்படிப்பட்ட வறுமையும் நீங்கி செல்வ செழிப்பு படிப்படியாக உயரும்.