நீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்க வில்லையா ? இந்த கதையை படியுங்கள்

parigaram

சிலர் என்ன தான் பரிகாரம் செய்தாலும் வாழ்வில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் பரிகாரம் செய்யும் முறையே. எப்படி பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை விளக்க ஒரு குட்டி கதை இதோ.

king

ஒரு மன்னன் வேட்டையாடுவதற்காக ஒரு காட்டிற்கு சென்றான். வேட்டையாடுவதில் அவனுக்கு சற்று ஆர்வம் அதிகம் என்பதால் நேரம் போவதே தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருந்தான். ஒருவழியாக இருளும் சூழ ஆரமித்துவிட்டது. அவன் அடர்ந்த காட்டிற்குள் இருந்ததால் எதிரில் இருப்பவர்கள் கூட அவனுக்கு சரியாய் தெரியவில்லை.

இந்த நிலையில் ஒரு மரத்தில் மிகப்பெரிய மிருகம் ஒன்று இருப்பதுபோல அவன் உணர்தான். நாம் அந்த மிருகத்தை தாக்காவிட்டால் நம்மை அது தாக்கக்கூடும் என்றெண்ணிய மன்னன் அந்த மிருகத்தை நோக்கி அம்பெய்தினான். உடனே ஐயோ அம்மா என்ற அலறல் சத்தம் கேட்டது. என்ன இது மிருகத்தின் மீதல்லவா அம்பை எய்தினோம் ஏன் இப்படி ஒரு அலறல் சத்தம் என்று திகைத்த மன்னன் அந்த மரத்தருகில் சென்றான்.

forest

அங்கு பார்த்தால் 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மடிந்து கிடந்தான். மன்னனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒரு நிமிடம் திகைத்து நின்ற அவன் தன் மந்திரியை அழைத்து இந்த காட்டிற்குள் எங்காவது தான் இவன் தாய் தந்தையர் இருக்கக்கூடும் உடனே அவர்களை அழைத்து வாருங்கள் என்று கூறினான்.

- Advertisement -

king

மந்திரி சில காவலாளிகளை அழைத்துக்கொண்டு விரைந்தார். சிறுது நேரம் கழித்து விறகு வெட்டிக்கொண்டிருந்த ஒரு தம்பதியினரை மந்திரி அழைத்துவந்தார். அரசே இவர்கள் தான் அந்த சிறுவனின் தாய் தந்தையர் என்று அவர் கூறினார். அவர்களிடம் மன்னன் நடந்ததை கூறி, நான் இந்த தவறை தெரியாமல் செய்துவிட்டேன் என்று அவர்களிடம் மன்னிப்பு கேட்டான். ஆனால் அவர்கள் தன்னை மன்னிக்கவில்லை என்பதை மன்னன் உணர்ந்துகொண்டான்.

raja

மந்திரியை அழைத்து இரண்டு தட்டுகளை கொண்டுவரச்சொன்னான். பின் ஒரு தட்டில் தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற நகைகள் அனைத்தையும் கழற்றி வைத்தான். இன்னொரு தட்டில் தன் உடைவாளை வைத்தான். பின் அவர்களிடம் என்னை நீங்கள் மன்னிக்க விரும்பினால் இந்த தட்டில் உள்ள அனைத்து ஆபரணங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லை நீங்கள் என்னை தண்டித்தே தீரவேண்டும் என்று எண்ணினால் இந்த உடைவாளை எடுத்து என் கழுத்தை சீவி விடுங்கள் என்று கூறி அவர்கள் முன் மண்டியிட்டான்.

forest

இதை கண்ட மந்திரியும் வீரர்களும் படபடப்போடு நின்றுகொண்டிருந்தனர். நீண்ட மௌனத்திற்கு பிறகு விறகு வெட்டி பேச ஆரமித்தார். என் மகனே சென்ற பிறகு இந்த விலைமதிப்பற்ற நகைகளை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அதே சமயம் நான் மன்னனின் தலையை கொய்யவும் விரும்பவில்லை. எப்போது அவர் தன் தவறை உணர்ந்து என் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரோ அப்போதே அவரை நான் மணித்துவிட்டேன். இவரை கொள்வதால் எனக்கு என்ன பயன். என் மகனின் ஆன்மாவும் அதை ஏற்காது என்று கூறி தன் பேச்சை முடித்தார். பின் தன் மகனின் பிணத்தை சுமந்து கொண்டு தன் மனைவியோடு அங்கிருந்து சென்றார்.

forest

இதையும் படிக்கலாமே:
கேட்டது கிடைக்க உதவும் முருகன் மந்திரம்

இந்த கதையின் மூலம் நாம் அறிவது என்ன வென்றால் நாம் பரிகாரத்தை மனப்பூர்வமாக செய்தால் இறைவன் நம்மை நிச்சயம் மன்னிப்பார். கடமைக்கென்று செய்யும் எந்த பரிகாரத்தையும் இறைவன் ஏற்பதில்லை. அதை செய்வதால் நமக்கும் எந்த பயனும் இல்லை. ஆகையால் பரிகாரம் செய்யும்போது நான் பூர்வஜென்மத்திலும் இந்த ஜென்மத்திலும் செய்த பாவங்களுக்காக இந்த பரிகாரத்தை செய்கிறேன் இதை ஏற்று என்னை மன்னியுங்கள் இறைவா என மனதார வேண்டிக்கொண்டு பரிகாரம் செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான குட்டி கதைகள் மற்றும் சிறு கதைகளுக்கு தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து உடனுக்குடன் படியுங்கள்.