பரீட்சையில் வெற்றி பெற பரிகாரம்

bay-leaf
- Advertisement -

இன்னும் ஒரு சில நாட்களில் மாணவர்களுக்கு தேர்வுகள் வரவிருக்கின்றது. பொதுவாகவே தேர்வு என்றதுமே மாணவர்களுக்கு மனதில் ஒரு பதட்டம் இருக்கும். படித்ததெல்லாம் ஞாபகம் வருமா. எப்படி பரீட்சை எழுத போகிறோமோ, என்று தெரியவில்லை, என்ற பதட்டம் சில பேருக்கு இருக்கும். பரிட்சை நேரத்தில் அந்த பதட்டத்தை நீக்க ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம்தான் இது. இந்த பரிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

பரீட்சைக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் பதட்டம் இல்லாமல் தேர்வை எழுதி வெற்றி காண்பீர்கள். பரிகாரம் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு கல்வியின் அவசியத்தை பற்றி ஒரு திருக்குறளின் மூலம் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

இந்த திருக்குறள் நாம் எல்லோரும் அறிந்ததே. தவறுகள் இல்லாத விஷயங்களை எல்லாம், நம்முடைய குறைகள் நீங்கும் அளவுக்கு கற்க வேண்டும். கற்ற நல்ல விஷயங்களை எல்லாம் நம்முடைய வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டும். இதுதான் இந்தக் குறளின் பொருள். இதில் இன்னொரு சிறப்பு உள்ளது.

- Advertisement -

இந்த திருக்குறளை திருவள்ளுவர் துணைக்கால் இல்லாமல் எழுதி இருக்கிறார். அதற்கு பின்னால் என்ன அர்த்தம் மறைந்திருக்கிறது தெரியுமா. வாழ்க்கையில் நீங்கள் யார் துணையும் இல்லாமல் வாழலாம். கல்வி மட்டும் உங்களுக்கு துணையாக இருந்தால். அந்த துணைக்கால் கூட வராத அளவுக்கு இந்த குரலை வள்ளுவர் எழுதியுள்ளார் என்றால் இந்த குறளின் மகத்துவத்தை நீங்கள் தெரிந்து கொள்ளணும்.

படிப்பின் மகத்துவத்தை நீங்கள் தெரிந்து கொள்ளணும். உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் சொத்து சுகம் பணம் நகை எதை சேர்த்து வைக்கிறீர்களோ இல்லையோ, கல்வி செல்வத்தை முதலில் கொடுத்து விடுங்கள். அந்த கல்விச்செல்வம் அவர்களை எதிர்காலத்தில் நல்வழிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது தேர்வில் வெற்றிக்கான அந்த பரிகாரம் என்ன என்பதை பார்த்து விடுவோம்.

- Advertisement -

தேர்வில் வெற்றிக்கான பரிகாரம்

தேர்வுக்கு செல்வதற்கு முன்பு பதட்டமாக இருக்கிறதா. ஒரு பிரியாணி இலை எடுத்துக்கோங்க. அதில் ‘212585212’ இந்த எண்ணை பிங்க் நிற பேனாவில் எழுதி விடுங்கள். பிறகு சிறிது நேரம் இந்த நம்பரை பார்த்து விடுங்கள். அந்த பிரியாணியிலேயே கையில் வைத்துக்கொண்டு பயமே இல்லாம பரீட்சைக்கு போக போறேன்.

பதட்டமே இல்லாமல் பரிட்சையை எழுத போறேன், என்று பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைத்து விடவும். பிறகு அந்த பிரியாணி இலையை ஒரு அகல் விளக்கு நெருப்பிலோ அல்லது மெழுகுவத்தி நெருப்பிலோ பொசுக்கி அந்த சாம்பலை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். பிறகு பரீட்சைக்கு செல்லுங்கள். நிச்சயமாக பதட்டம் இல்லாமல் நல்லபடியா பரீட்சை எழுதுவீங்க.

இதையும் படிக்கலாமே: வியாபாரம் சிறப்பாக நடக்க பரிகாரம்

வருடம் முழுவதும் தேர்வுக்காக கஷ்டப்பட்டு படித்தவர்களுக்கு இந்த பரிகாரம் நிச்சயம் பலனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. படித்தது மறந்து போகாது. நல்ல படியா தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். இதை நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும். இதை எந்த பரீட்சைக்கு வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். சில பேர் வேலை வாய்ப்பு தேடி பரீட்சை எழுத போவாங்கல்லவா, அவர்களும் பயன்படுத்தலாம் நல்லது நடக்கும்.

- Advertisement -