குக்கரில் ஒரே ஒரு விசில் விட்டால் போதும் பத்தே நிமிஷத்துல சூப்பரான மதுரை ஸ்பெஷல் பரோட்டா சால்னா ரெடி. இந்த சால்னாவோட ஸ்பெஷலே இதுல சேக்குற இந்த மசாலா தான். வாங்க அது என்னன்னு பாத்துரலாம்.

plain salna
- Advertisement -

பொதுவாக ரோட்டு கடைகளில் கிடைக்கும் பரோட்டா சால்னா இன்று பெரும்பாலானரில் விருப்பமான உணவாக உள்ளது. அதிலும் இந்த பரோட்டா சால்னாவுக்கு ஃபேமஸ் என்றால் அது மதுரை ஸ்பெஷல் பரோட்டா சால்னா தான். அதை சாப்பிட வேண்டும் என்ற நாம் இனி கடைக்கு சென்று தான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் கிடையாது இந்த முறையில் செய்தல் வீட்டிலே ரொம்ப சுலபமாக அந்த ஸ்பெஷல் பரோட்டா சால்னாவை நாம் செய்து விடலாம். வாங்க அதை எப்படி செய்வதென்று இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த சால்னா செய்வதற்கு முதலில் மூன்று பெரிய வெங்காயத்தை நல்ல பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதற்கு வெங்காயத்தை எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அந்த அளவுக்கு நறுக்கி கொள்ளுங்கள். அதே போல் மூன்று தக்காளியும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த சால்னாவுக்கு ஒரு மசாலாவை அரைத்து விடுவோம். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் பத்து சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் கால் கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, 10 முந்திரி ஒரு டீஸ்பூன் கசகசா இரண்டையும் 20 நிமிடம் ஊற வைத்து அதையும் இத்துடன் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள் சால்னாவுக்கான மசாலா தயார்.

அடுப்பில் குக்கர் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் 2 லவங்கம், 2 ஏலக்காய், 1 நட்சத்திர பூ, 2 பட்டை, 2 பிரியாணி இலை அனைத்தையும் சேர்த்து பொரிந்த பிறகு, அரிந்து வைத்த வெங்காயத்தை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை இதில் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாடை போன பிறகு தக்காளியை சேர்த்து 1/4 ஸ்பூன் உப்பையும் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு ஒரு கைப்பிடி புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள். புதினா சேர்க்கும் போது இதன் சுவை இன்னும் கூடுதலாகவே இருக்கும்.

இவை எல்லாம் வதங்கிய பிறகு 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், 1 1/2 டீஸ்பூன் தனியாத் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 1/2  டீஸ்பூன் உப்பு இவையெல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை நன்றாக கலந்து எண்ணெய் பிரிந்து வந்த பிறகு, நாம் ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவை இதில் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: மீந்து போன சாதம் 1 கப் இருந்தா 10 நிமிஷத்தில் பஞ்சு போல இடியாப்பம் செய்யலாமே! இது மட்டும் தெரிஞ்சா இனி கொஞ்சம் சாதத்தையும் குப்பையில் கொட்டி வீணாக்க மாட்டீங்க!

இப்போது குக்கரை மூடி ஒரே ஒரு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். விசில் இறங்கிய பிறகு குக்கரின் முடியை திறந்து கொத்தமல்லி பொடியாக அரிந்து மேலே தூவி இறக்கி விடுங்கள். சுவையான மதுரை பரோட்டா சால்னா நிமிடத்தில் தயார். இந்த சால்னா பரோட்டா டிபன் வகைகளுக்கு மட்டுமல்லாமல் சாதத்துடன் வைத்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். நீங்களும் ஒரு முறை சால்னாவை இப்படி சிம்பிளா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -