ரொம்பவே வித்தியாசமான இந்த சட்னி ரெசிபியை தெரிஞ்சி வைச்சிகிட்டா, அவசர நேரத்துக்கு சட்டுன்னு சூப்பரான ஒரு சட்னி ரெடி பண்ணிடலாம்? இதுக்கு அப்புறம் நேரமே இருந்தாலும் இந்த சட்னியை தான் அரைப்பீங்க.

paruppu-chutney
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் காலையில் வேலைக்கு கிளம்பும் போது அனைவருமே ஏதோ போருக்கு செல்வதை போல் கிளம்பி கொண்டு இருப்பார்கள். இந்த நேரத்தில் சமையலை பொருத்த வரையில் வகை வகையாக செய்து கொண்டு இருக்க முடியாது. அதிலும் காலை டிபனுக்கு என்று ஏதாவது ஒரு சிம்பிளான சைடிஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அது போன்ற சமயங்களில் இந்த சட்னி ரெசிபியை ட்ரை பண்ணுங்க ரொம்ப சூப்பரா இருக்கும்.

பொதுவாகவே சட்னி என்றால் ஒன்று பொட்டுக்கடலை சட்னி அல்லது வேர்கடலை சட்னி இந்த இரண்டும் இல்லாத பட்சத்தில் வெங்காயம் தக்காளி சேர்த்த அரைக்கும் சட்னி இதை தான் பெரும்பாலான நேரங்களில் செய்வோம். இந்த பதிவில் ரொம்பவே வித்தியாசமாக பொட்டுக்கடலை, வேர்க்கடலை, உளுத்தம் பருப்பு இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து சுவை மிகுந்த ஒரு சட்னியை எப்படி அரைப்பது என்று பார்க்கலாம்.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு மூன்று டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை, மூன்று டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ரெண்டு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை இது மூன்றையும் சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்கள்.

இத்துடன் ஆறு காய்ந்த மிளகாய் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியையும் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இதை அப்படியே சிறிது நேரம் ஆற விடுங்கள். அடுத்து மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த பொருட்கள் எல்லாம் சேர்த்து கால் டீஸ்பூன் உப்பையும் சேர்த்த பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்து இதை ஒரு பவுலில் மாற்றி ஊற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கடைசியாக இந்த சட்னியை தாளிப்பதற்கு அடுப்பில் சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஒரு கடுகு சேர்த்து பொரிந்தவுடன், இரண்டு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்து ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்த பின்பு அடுப்பை அணைத்து விட்டு, ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்த பிறகு இந்த தாளிப்பை சட்னியில் ஊற்றி கலந்து விடுங்கள். சுவையான பருப்பு சட்னி நிமிடத்தில் தயார்.

இதையும் படிக்கலாமே: பிரட் ஸ்வீட் ரசமலாய் செய்முறை விளக்கம்: (Bread Rasmalai Recipe in Tamil)

இந்த சட்னி இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி, உப்புமா என அனைத்திற்கும் ரொம்பவே பொருத்தமாக இருக்கும். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க திரும்பத் திரும்ப செய்வீங்க.

- Advertisement -