- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சுட சுட சூப்பரா மசால் வடை சாப்பிடணும்னு ஆசை பட்ட பத்து நிமிசத்துல வடை ரெடி....

சுட சுட சூப்பரா மசால் வடை சாப்பிடணும்னு ஆசை பட்ட பத்து நிமிசத்துல வடை ரெடி. ஊற வைச்சு, அரைச்சு இனி அதெல்லாம் தேவையே இல்ல. அது எப்படின்னு தெரிஞ்சிக்கலாமா?

- Advertisement -

கேரட் வடை செய்வது எப்படி

வீட்டிற்கு யாராவது திடீரென விருந்தாளி வந்து விட்டாலோ அல்லது நமக்கே கூட ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், டிபனுக்கு சைடிஷ் ஆக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும் முதலில் ஞாபகத்துக்கு வருவது வடை தான். ஆனால் இதற்கு பருப்பு ஊற வைத்து அரைத்து என வேலை கொஞ்சம் அதிகமாக நீளும் என்பதால் பெரும்பாலும் இதை செய்ய சோம்பல் பட்டு விடுகிறோம். இனி அதை காண அவசியமே இல்லை வடை சாப்பிட வேண்டும் என்று நினைத்த பத்தாவது நிமிடத்தில் சுடச்சுட வடை ரெடி பண்ணிடலாம். வாங்க அதை ரெடி பண்றது எப்படின்னு பார்க்கலாம்.

பருப்பு இல்லாத கேரட் வடை செய்ய தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் – 1 கப், பொட்டுக்கடலை -1 கப், சோம்பு -1 டீஸ்பூன், மிளகு -1/2 டீஸ்பூன், சீரகம் -1/2 டீஸ்பூன், வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1/2 கப், பச்சை மிளகாய் – 2, காய்ந்த மிளகாய் -1, கருவேப்பிலை, கொத்தமல்லி -1 கைப்பிடி, பூண்டு – 4, எண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

பருப்பு இல்லாத கேரட் வடை செய்வது எப்படி

இந்த வடை செய்வதற்கு ஒரு கப் பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் சோம்பு, மிளகு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது சற்று கொரகொரப்பாக தான் இருக்கும் அடுத்து அதில் துருவிய கேரட்டையும், நான்கு பல் பூண்டையும் சேர்த்து இன்னும் ஒரு முறை அரைத்து எடுத்தால், வடை மாவு பதத்திற்கு கிடைத்து விடும். இதை ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி அனைத்தையும் நல்ல பொடியாக நறுக்கி அரைத்து வைத்த வடை மாவுடன் சேர்த்த பிறகு சீரகம், உப்பு இரண்டையும் கலந்து நன்றாக லேசா தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளுங்கள். தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது வடை அதிகம் எண்ணெய் குடித்து சப்[பிட நன்றாக இருக்காது.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அடுப்பை மீடியம் பிளேமிற்கு மாற்றி விடுங்கள். அதன் பிறகு நீங்கள் கலந்து வைத்திருக்கும் வடை மாவை எடுத்து தட்டி எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் சிவந்து வரும்படி பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் சேர்த்து இருக்கும் பொட்டுக்கடலை, கேரட் இதையெல்லாம் அதிகம் வேக வேண்டிய அவசியமில்லை எனவே போட்ட இரண்டு நிமிடத்தில் எடுத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: 1 வெங்காயம் போதும் ரோட்டு கடை தண்ணி சட்னி அரைக்க, இது தெரிஞ்சிகிட்ட பிறகு, இந்த சட்னி யை இவ்வளவு ஈஸியா அரைக்கலாம்னு தெரியாம போச்சேன்னு கண்டிப்பா நெனைப்பீங்க.

சுலபமாக செய்யக்கூடிய இந்த வடை பொட்டுக்கடலை, கேரட் எல்லாம் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். நீங்களும் இந்த சிம்பிள் வட ரெசிபி உங்க வீட்டில் செய்து பாருங்கள்.

சற்று முன்