அறுசுவைகளில் நாம் முதன்மையான இடத்தை கொடுப்பது இந்த இனிப்பிற்கு தான். ஏனென்றால் வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல காரியமும் இனிப்புடன் ஆரம்பித்தால் அனைத்துமே மகிழ்ச்சியாக நடக்கும் என்பது நம்பிக்கை. நம்முடைய தமிழர் கலாச்சாரத்தில் விருந்து என்றவுடன் வடை பாயாசம் என்று தான் கேட்பார்கள். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இனிப்பில் இந்த பாயாசம் தான் பிரதானம். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவிலும் ஒரு அருமையான பாயாசம் எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு -1/4 கப், ஜவ்வரிசி -1/4 கப், சேமியா -1/4 கப், வெல்லம் – 11/4 கப், நெய் – 4 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10, திராட்சை -10, ஏலக்காய் பவுடர் -1/2 ஸ்பூன்.
செய்முறை
இந்த பாயாசம் செய்வதற்கு முதலில் ஜவ்வரிசியை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலசிய பிறகு நல்ல தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் குக்கரை வைத்து கால் கப் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்த பின் ஒரு கப் தண்ணீரை ஊற்றி இரண்டு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
அடுத்ததாக அடுப்பில் ஒரு அகலமான கடாய் வைத்து சூடானவுடன், சேமியாவை சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யும் சேர்த்து சேமியா நன்றாக சிவந்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஊற வைத்த ஜவ்வரிசியும் இதில் சேர்த்து இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி இதை ஒரு புறம் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது மீண்டும் ஒரு பேன் வைத்து வெல்லம் சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். இதற்கு பாகுபதம் தேவையில்லை வெல்லம் தண்ணீரில் நன்றாக கரைந்தால் போதும். இதையும் ஒரு புறம் அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
சேமியா, ஜவ்வரிசி இரண்டும் பத்து நிமிடம் வரை கொதித்தால் போதும். அதன் பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்த பாசிப்பருப்பை மசித்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஒரு கொதி வந்த பிறகு கரைத்து வைத்த வெள்ளை கரைசலை வடிகட்டி இதில் ஊற்றிய பிறகு, ஏலக்காய் பொடி சேர்த்து ஐந்து நிமிடம் கை விடாமல் கலந்து கொண்டே இருங்கள். இந்த வெள்ளைக் கரைச்சலுடன் மற்ற அனைத்தும் ஒன்றாக கலந்து வர வேண்டும்.
கடைசியாக அடுப்பில் சின்ன தாளிப்பு கரண்டி வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து சிவந்து வந்தவுடன், திராட்சையும் சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு பாயாசத்தில் சேர்த்துக் விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: காரசாரமா கார சட்னி அரைக்க போறீங்களா? 1 கைப்பிடி கருவேப்பிலை இப்படி சேர்த்து அரைச்சா டேஸ்டுல மயங்கிடுவீங்க! அவ்வளவு ருசியாக இருக்கும்.
பாசிப்பருப்பு, ஜவ்வரிசி,சேமியா இவையெல்லாம் சேர்த்து செய்யும் இந்த பாயாசம் மிக மிக சுவையாக, அதே சமயம் மிகவும் வித்தியாசமாகவும் இருக்கும். இதில் நாம் பால் தேங்காய் பால் தேங்காய் என எதையும் சேர்க்காமல் செய்திருப்பதால் சீக்கிரத்தில் கெட்டும் போகாது. இதை பெரியவர்கள் முதல் அனைவருமே சாப்பிடலாம் ட்ரை பண்ணி பாருங்க.