காரசாரமான பருப்பு பொடியை ஒருவாட்டி, உங்கள் வீட்டில் இப்படி அரைத்துப் பாருங்கள்! சுட சுட சாப்பாட்டில் போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

parupu-podi
- Advertisement -

பொதுவாகவே ஆந்திரா ஹோட்டல்களில் பருப்புப்பொடிக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படும். காரசாரமான பருப்புப்பொடி என்றால், பல பேருக்கு மிகவும் பிடிக்கும். அந்த பருப்பு பொடியை, பக்குவமாக நம்முடைய வீட்டில் எப்படி அரைப்பது, என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கொஞ்சம் சுடசுட சாப்பாடு, 2 ஸ்பூன் பருப்பு பொடி, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட, அவ்வளவு ருசி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காரசாரமான பருப்பு பொடி எப்படி செய்வது? பார்த்து விடலாமா?

parupu-podi1

பருப்பு பொடி செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 100 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், பொட்டுக்கடலை – 100 கிராம், மிளகாய் – 10 லிருந்து 15 காரத்திற்கு ஏற்ப, சீரகம் – 2 ஸ்பூன், பெருங்காயம் – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – இரண்டு கொத்து, பூண்டு – 10 பல் தோல் உரித்தது, உப்பு தேவையான அளவு.

- Advertisement -

கொஞ்சம் தடிமனான கடாயை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பாக துவரம் பருப்பையும், பாசிப்பருப்பையும் வறுத்தெடுக்க வேண்டும். இரண்டு பருப்புகளையும், தனித்தனியாகத்தான் வறுத்தெடுக்க வேண்டும். துவரம் பருப்பு, பாசிப் பருப்பும் எண்ணெய் ஊற்றாமல், நன்றாக சிவக்கும் அளவிற்கு, வாசம் வரும் அளவிற்கு வறுத்து ஒரு தட்டில் கொட்டி கொள்ளுங்கள்.

kadalai-paruppu

அடுத்ததாக, பொட்டுக்கடலையை அதே கடாயில் போட்டு, லேசாக சூடு ஆகும்படி வறுத்து, அதையும் தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். வரமிளகாய் உடையும் அளவிற்கு வறுபட வேண்டும். அடுத்ததாக ஜீரகம், பெருங்காயம் இரண்டையும் வறுத்து அதே தட்டில் கொட்டி கொள்ளுங்கள். கறிவேப்பிலை இரண்டு கொத்து மொருமொரு என்று உடையும் அளவிற்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

10 பல் பூண்டை, நன்றாக உரலில் போட்டு நைத்துவிட்டு, இறுதியாக கடாயில், ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து ப்ரவுன் கலர் வரும் அளவிற்கு வறுக்க வேண்டும். பூண்டில் ஈரப்பதம் இருந்தால், பருப்பு பொடி, சீக்கிரமாக கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

pasiparupu

வருத்த இந்த பூண்டையும், தட்டில் கொட்டி நன்றாக ஆற வைக்கவேண்டும். இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு, உப்பை அந்த கடாயில் போட்டு, உப்பின் ஈரப்பதம் போகும் அளவிற்கு 30 வினாடிகள் வதக்கி, அதையும் தட்டில் கொட்டி விடுங்கள். இப்போது எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து விட்டால், சுவையான காரசாரமான பருப்பு பொடி தயார்.

parupu-podi2

காற்றுப்புகாத டப்பாவில் இந்த பொடியை சேகரித்து வைத்துக் கொண்டால், மூன்று மாதங்களுக்கு கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. (பொடிக்கு தேவையான இந்த எல்லாப் பொருட்களையும் தனித்தனியாக தான், கடாயில் போட்டு வறுக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் நன்றாக வரவில்லை என்றால், பொடியில் பச்சை வாசனை அடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.) உடலுக்கு ஊட்டச்சத்தை தரும் பருப்புவகைகள் சேர்ந்த இந்தப் பொடி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -