சுடு சாதம் மட்டும் வடித்தால் போதும். சூப்பரான பருப்பு பொடி ஐந்தே நிமிடத்தில் தயார். பேச்சிலர்ஸ் கூட இதை சுலபமாக செய்யலாம்.

- Advertisement -

மனைவிக்கு உடம்பு சரியில்லையா. வெறும் சாதத்தை மட்டும் குக்கரில் வைத்து விடுங்கள். சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அருமையான ஒரு பருப்பு பொடி ரெசிபியை வீட்டில் இருக்கும் ஆண்கள் கூட மிக மிக எளிமையாக செய்துவிடலாம். எப்போதும் குழம்பு சாப்பிட்டு போர் அடிக்குது என்றால், இந்த பொடியை உடனடியாக அரைத்து சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால், அருமையான ருசி இருக்கும். வாங்க அந்த சிம்பிள் பருப்பு பொடி ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து முதலில் துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், இந்த மூன்று பருப்புகளை போட்டு பொன்னிறம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் நெய் – 1/2 ஸ்பூன் விட்டு பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே கடாயில் மீண்டும் கொஞ்சமாக நெய்விட்டு தட்டிய பூண்டு பல் – 4 போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் – 4, போட்டு லேசாக வறுத்து இதையும் தட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். இறுதியாக மிளகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வறுத்து எடுத்து அதே கடாயில் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளுங்கள். அடுப்பை அணைத்துவிட்டு உப்பை லேசாக சூடு செய்து எடுத்தால் போதும்.

வறுபட்ட எல்லா பொருட்களையும் நன்றாக ஆரவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைக்க வேண்டும். முடிந்தவரை நைசாக அரைத்து சல்லடையில் சலித்து, நைசான பொடியை மட்டும் எடுத்தால், சூப்பரான பருப்பு பொடி தயார்.

- Advertisement -

இதை சுடச்சுட சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். குருணை குருணையாக இருக்கும் பருப்பு பொடியை நல்லெண்ணெய் விட்டு இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட பயன்படுத்திக் கொள்ளலாம்.

குழம்பு வைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. இதில் பருப்பு வகைகளை எல்லாம் சேர்த்து செய்து இருப்பதால், ஆரோக்கியமான நிறைவான உணவாகத்தான் இருக்கும். மீதம் பொடி இருந்தால் கூட ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பத்து நாட்களுக்கு மேல் வைத்தாலும் இந்த பொடி கெட்டுப் போகாது. பூண்டினை கொஞ்சம் நன்றாக வறுத்து சேர்த்து அரைக்க வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் கோதுமை மாவு இருந்தா கொஞ்சம் வித்தியாசமா இப்படி செஞ்சு கொடுங்க. இது இருந்தா குழந்தைகளை சாப்பிட வைக்க கொஞ்சம் கூட டென்ஷனே ஆக வேண்டாம்.

இந்த சிம்பிளான ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம நாளைக்கு மதியமே ட்ரை பண்ணி பாருங்க. இதற்கு தொட்டுக் கொள்ள வத்தல் வடாம் எது இருந்தாலும் சூப்பராக தான் இருக்கும். இல்லை கொஞ்சம் ஊறுகாய் இருந்தால் கூட சாப்பாடு உள்ளே இறங்கி விடும்.

- Advertisement -