- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஒரு கப் கோதுமை மாவு இருந்தா கொஞ்சம் வித்தியாசமா இப்படி செஞ்சு கொடுங்க. இது இருந்தா...

ஒரு கப் கோதுமை மாவு இருந்தா கொஞ்சம் வித்தியாசமா இப்படி செஞ்சு கொடுங்க. இது இருந்தா குழந்தைகளை சாப்பிட வைக்க கொஞ்சம் கூட டென்ஷனே ஆக வேண்டாம்.

- Advertisement -

கோதுமை மாவில் செய்யும் பூரி, சப்பாத்தி போன்றவகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கோதுமை தோசை யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் இந்த முறையில் செய்து கொடுத்து பாருங்கள். தினமுமே கூட கோதுமை தோசை செய்து தர சொல்லி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும் அதே நேரத்தில் நல்ல ஒரு ஆரோக்கியமான உணவாகவும் இருக்க கூடிய சூப்பர் ரெசிபி தான் இது. வாங்க அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கணும்.

தேவையான பொருட்கள்

முட்டை- 2, கோதுமை மாவு -1 கப், மிளகு தூள் – 1ஸ்பூன், சீரகத்தூள்-1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன், வெங்காயம் -1பொடியாக நறுக்கியது, தக்காளி -1 பொடியாக நறுக்கியது, குடைமிளகாய் -1/4 கப், கருவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது -1 கைப்பிடி, உப்பு -1/4 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை விளக்கம்

இந்த கோதுமை தோசை செய்ய ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். (முட்டை சேர்க்க வேண்டாம் என்று நினைத்தால் இதை தவிர்த்து விடலாம்). அதில் கோதுமை மாவை சேர்த்து இத்துடன் அரைக் கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதில் மிளகு தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்து விட்டுங்கள்.

இந்த மாவை 10 நிமிடம் மூடி போட்டு அப்படியே மூடி வைத்து விடுங்கள். மாவு கொஞ்ச நேரம் ஊறினால் தோசை நல்ல மிருதுவாகவும், சாப்பிட ருசியாகவும் இருக்கும். அடுத்து நறுக்கி வைத்த காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி, அனைத்தையும் கரைத்து வைத்த மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் நன்றாக கலந்த பிறகு அடுப்பை பற்ற வைத்து கல் வைத்து சூடானவுடன் தோசை ஊற்ற ஆரம்பிக்கலாம். இந்த மாவு தோசை மாவு பதத்தில் இருந்தால் கோதுமை தோசை ஊற்றும் போது மிகவும் நன்றாக வரும். ஒரு புறம் வெந்தவுடன், மறுபுறம் திருப்பி போட்டு சிவந்ததும் தோசை எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வாழைக்காய் பஜ்ஜி செய்ய வீட்டில் வாழைக்காய் இல்லையா? அப்போ சட்டுன்னு இத வச்சு வாழைக்காய் பஜ்ஜி சுடலாமே!

இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு கோதுமை, முட்டை , காய்கறிகள் என அனைத்து சத்தும் ஒரே நேரத்தில் கிடைக்கும். நல்ல ஆரோக்கியமான உணவை கொடுத்தது போல் இருக்கும். இப்படி செய்வதால் கோதுமை தோசை போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான நல்ல ஒரு பிரேக்ஃபாஸ்ட் ஆக இருக்கும். நீங்களும் கட்டாயம் உங்க வீட்டில் என்ன ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்