பாச யோகம் பலன்கள்

ஜாதகத்தில் ஒரு மனிதனின் செல்வ நிலையை பற்றி கூறும் யோகங்கள் பல இருக்கின்றன. ஆனால் செல்வதை விட வலிமையான உணர்வான மனிதனின் அன்பு, பாசம் பற்றி கூறும் யோகங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. அந்த வகையில் ஒரு மனிதனின் பொருளாதார செல்வ நிலை பற்றியும், அந்த மனிதன் பிறர் மீது செலுத்தும் அன்பு, பாசம் பற்றி கூறும் ஒரு அரிதான யோகமாக “பாச யோகம்” இருக்கிறது. பாச யோகம் பற்றிய மேலும் பல விவரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் ஜாதகத்தில் ராகு – கேது கிரகங்களை தவிர்த்து மற்ற 7 கிரகங்களும் ஏதாவது ஐந்து ராசிகளில் இருந்தால், அந்த ஜாதகருக்கு “பாச யோகம்” ஏற்படுகிறது. இந்த யோகம் அரிதாக ஏற்படக்கூடிய யோகங்களில் ஒன்றாகும்.

ஜாதகத்தில் பாச யோகம் கொண்டு பிறந்தவர்கள் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி ததும்பும். இவர்களிடம் பிறர் பாசமாக இருப்பது போல் நடித்தாலும் இந்த ஜாதகர்கள் பிறர் மீது உண்மையான பாசம் வைப்பவர்களாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் சரிசமமாக பழகுவார்கள். எனவே தான் இந்த யோகத்திற்கு “பாச யோகம்” என்கிற பெயர் உண்டானது. பாச யோகத்தில் ஒரு நபர் பிறந்த பிறகு அந்த வீட்டின் பொருளாதார செல்வ நிலை மேலும் உயரும். செல்வந்தராக இருந்தாலும் இந்த ஜாதகருக்கு ஒழுக்கமான குணங்கள் அதிகம் இருக்கும்.

சிறப்பான கல்வியை பயில்வார்கள். பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரங்களில் பல வெற்றிகளை பெறுவார்கள். தெய்வ பக்தி அதிகம் இருக்கும். கோயில் சம்பந்தமான காரியங்களை முன்னின்று நடத்துவதும், அவற்றிற்கு பெருந்தொகைகளை தானமாக அளிப்பதும் இவர்களுக்கு விருப்பத்திற்குரிய செயலாக இருக்கும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலானவர்களுக்கு பரம்பரை சொத்துக்கள் அதிகம் இருக்கும். பரம்பரை பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள் என்கிற பெயர் பெற்ற வம்சத்தினராக இருப்பர். தங்களின் வீடுகள் மற்றும் தொழில் கூடங்களில் பல வேலைக்காரர்களை பெற்றிருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே:
அனபா யோகம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pasa yoga in Tamil.