அனபா யோகம் பயன்கள்

anapa

ஜோதிட சாத்திரங்களில் சந்திர பகவானுக்கு தனி இடம் உண்டு. ஒரு நபரின் ஜாதகத்தில் 12 கட்டங்களில் சந்திரன் இருக்கும் வீடு தான் அந்த ஜாதகரின் ராசி ஆகும். ஜாதகத்தில் கிரகங்களின் பல விதமான நிலைகள், அமைப்புகளை கொண்டு பல்வேறு யோகங்கள் ஒருவருக்கு ஏற்படுகின்றன. அந்த வகையில் ஜாதகத்தில் சந்திரன் கிரகத்தை அடிப்படையாக கொண்டு ஏற்படும் “அனபா” யோகத்தை பற்றி இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Lord-Chandra

ஒரு நபரின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் வீட்டிற்கு 12 ஆம் வீட்டில் “சூரியன், சனி, ராகு, கேது” ஆகிய கிரகங்களை தவிர்த்து வேறு ஏதேனும் கிரகங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஒட்டுமொத்தமாக அந்த 12 ஆம் இடத்தில இருந்தால் அந்த ஜாதகருக்கு அனபா யோகம் ஏற்படுகிறது.

அனபா யோகத்தில் பிறந்த ஜாதகர்கள் மிகுந்த பாக்கியசாலிகள் என பெரும்பாலான ஜோதிட சாத்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. பிறந்ததிலிருந்தே நற்குணங்கள் அதிகம் கொண்ட நபர்களாக இந்த அனபா யோக ராசிக்காரர்கள் இருப்பார்கள். பிறரை தன்பக்கம் கவர்ந்திழுக்கக்கூடிய ஒரு வசீகரமான காந்தத்தன்மை இவர்களிடம் அதிகம் இருக்கும். சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படும் உயர்ந்த நிலையை அடைவார்கள். அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை எப்போதும் பெறக்கூடிய திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். பொறுமை குணம் இவர்களிடம் அதிகம் இருக்கும்.

Chandra Baghavan

 

- Advertisement -

இவர்களின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு 12 ஆம் இடத்தில் குரு கிரகம் இருக்க பெற்றால் மதத்தின் மீது தீவிர பற்றும், யோகம், தியானம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர். அந்த 12 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க பெற்றால் சுக போகங்களில் அதிகம் ஈடுபாடு உள்ளவராக இருக்கக்கூடும். புதன் இந்த 12 ஆம் வீட்டில் இருந்தால் சிறந்த எழுத்து மற்றும் பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். செவ்வாய் பன்னிரண்டாம் ஆம் வீட்டில் இருந்தால் அதிகாரம் செலுத்தும் தன்மை பிறரை வழிநடத்தக்கூடிய தலைமை குணம் உண்டாகும். இந்த கிரகங்கள் அனைத்தும் அந்த 12 ஆம் வீட்டில் இருந்தால் அனைத்து கிரகங்களின் கலவையான நற்பலன்கள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

ஜாதகம் பார்ப்பது எப்படி என்பதை அறிய எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Anapha yoga benefits in Tamil or Anapha yogam payangal is here in Tamil language. Astrology in Tamil.