வெறும் பாசி பருப்பு இருக்கா உங்க வீட்டில? அப்ப 10 நிமிஷத்துல இந்த தோசையை மொருமொருன்னு சுட்டு எடுக்கலாம் வாங்க!

dosai

இட்லி மாவு இல்லாத சமயத்தில் பாசிப்பருப்பை வைத்து சுலபமான முறையில் மொரு மொரு தோசை எப்படி செய்வது, என்பதனையும் கூடவே இதற்கு தொட்டுக்கொள்ள பச்சை சட்னி, ஆரோக்கியமான சட்னி எப்படி செய்வது என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிகமிகக் குறைவான பொருட்களை வைத்து குறைந்த நேரத்தில் டக்குனு செய்யக்கூடிய ஒரு பிரேக் பாஸ்ட் இது. மிஸ் பண்ணாம கடைசி வரைக்கும் படிச்சு தெரிஞ்சுக்கோங்க! அதுக்கு அப்புறம் உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும், உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க போதும்.

pasiparupu

முதலில் பாசிப்பருப்பு தோசை செய்ய தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு – 150 கிராம், அரிசி மாவு – 50 கிராம்(இடியாப்ப அரிசி மாவு, கடையில் வாங்கும் அரிசி மாவையும் பயன்படுத்திக் கொள்ளலாம்), சோடா உப்பு – 1 சிட்டிகை அளவு, உப்பு தேவையான அளவு அவ்வளவு தான்.

முதலில் பாசிப்பருப்பை நன்றாக கழுவி தண்ணீரில் 1 மணி நேரம் வரை நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த பாசிப் பருப்பில் இருந்து முதலில் தண்ணீரை வடித்து விட்டு, மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். இதோடு, இந்த பாசிப்பருப்பு சேர்த்து அரிசி மாவையும் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

dosai1

இதை ஒரு பவுலில் மாற்றி தேவையான அளவு உப்பு, சோடா உப்பு போட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து தோசை கல்லில் எப்போதும்போல தோசை வாக்கலாம். உங்களுக்கு விருப்பப்பட்டால் மேலே இட்லி பொடியைத் தூவி, எண்ணெய் அல்லது நெய் விட்டும் கூட இந்த தோசையை சாப்பிடலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். இந்த தோசை மொறுமொறுவென எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் வரும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

அடுத்தபடியாக அந்தப் பச்சை சட்னியையும் பார்த்துவிடலாமா? ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சின்ன வெங்காயம் – 10, இஞ்சி – சிறிய துண்டு, கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 2 அல்லது 3, பழுத்த தக்காளி – 1, புளி – 1 பின்ச் அளவு தேவையான அளவு உப்பு, இது எல்லாவற்றையும் பச்சையாகவே போட்டு மைய கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொண்டால் போதும்.

chutney5

இந்தச் சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், நான்கு பூண்டை தட்டி போட்டு, பூண்டு பொன்னிறமாக சிவந்ததும் தாளித்து கொட்டினால் ஐந்தே நிமிடத்தில் சட்னியை தயார் செய்துவிடலாம். மேலே சொல்லப்பட்டிருக்கும் பாசிப்பருப்பு தோசைக்கு இது செம்மடை சைடிஷ்.

இதையும் படிக்கலாமே
உங்கள் மணி பிளான்ட் எந்த வடிவத்தில் இருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்? மணி பிளான்ட் செடியை இந்த இடத்தில் வைத்தால் செல்வம் மேலும் மேலும் பெருகி கொண்டே இருக்குமாம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.