பாசிப்பருப்புல ஒரு முறை இப்படி ரசம் வச்சு பாருங்க. சாப்பாடு கூட வேண்டான்னு வெறும் ரசத்தையே குடிப்பாங்க. அவ்வளவு டேஸ்டா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

நம் உணவு பழக்கத்தில் எந்த ஒரு சமையல் செய்தாலும், அத்துடன் ரசம் என்பது கண்டிப்பாக இருக்கும். இன்றைய அவசர கால நிலையில் வேண்டுமானால் சில வீடுகளில் இதை தவிர்த்து இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் எந்த சமையல் இருந்தாலும் கடைசியாக கொஞ்சம் ரசம் சாதம் சாப்பிடும் வழக்கம் இன்றளவும் இருக்க தான் செய்கிறது. இந்த ரசத்தை பல வகைகளில் வைக்கலாம். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவு பாசிப்பருப்பு வைத்து ஒரு அருமையான ரசம் எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த பாசிப்பருப்பு ரசம் செய்வதற்கு ஒரு கப் பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது குக்கரில் ஒரு கப் பாசிப் பருப்புடன் ஒரு பெரிய தக்காளி நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் நான்கு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சேர்த்து பருப்பு தக்காளி இவையெல்லாம் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். பருப்பு ஆறிய பிறகு அதை மத்து வைத்து கடைந்து வைத்துக் கொள்ளுங்கள்

- Advertisement -

அடுத்ததாக ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் நான்கு பூண்டு பல் தோல் உரிக்காதது. இவை அனைத்தையும் ஒரு இடி உரலில் இடித்துக் கொள்ளுங்கள். அதே போல் நெல்லிக்காய் அளவு புளி எடுத்து ஊற வைத்து கரைத்து வடிகட்டி அதையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிக் காய்ந்தவுடன், ஒரு டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் சீரகம், சேர்த்து பொரிந்தவுடன் இரண்டு பச்சை மிளகாய் நீளவாக்கில் அறிந்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அத்துடன் ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு பெரிய தக்காளியும் பொடியாக நறுக்கி சேர்த்த பிறகு இடுத்து வைத்த மிளகு, சீரகத்தையும் இத்துடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இவையெல்லாம் வதங்கிய பிறகு புளி தண்ணீரையும் இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கொதிக்க விடுங்கள்.

கடைசியாக வேக வைத்த பருப்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் உப்பையும் அரை ஸ்பூன் வெல்லம் சேர்த்த பிறகு மூடி போட்டு ஒரு கொதி வந்தவுடன், பெருங்காயத்தூள் கொத்தமல்லி தழை சேர்த்து நுரைத்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: மனமனக்கும் கொங்கு நாட்டு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். 3 விசில் போதும். ஆளை தூக்கும் வாசனையில் சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தயார்.

சுவையான இந்த பாசிப்பருப்பு ரசத்தை சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது அருமையாக இருக்கும். இதை சாதம் கூட இல்லாமல் அப்படியே கூட குடித்து விடுவார்கள். அந்த அளவிற்கு சுவை நன்றாக இருக்கும். நீங்களும் ஒரு முறை இதே போல உங்க வீட்டில பாசிப் பருப்பு ரசத்தை செஞ்சு அசத்துங்க.

- Advertisement -