- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சுடச்சுட இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட இந்த பாசி பருப்பு சாம்பாரை ஒரு முறை செய்து...

சுடச்சுட இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட இந்த பாசி பருப்பு சாம்பாரை ஒரு முறை செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் அன்றைய தினம் எப்பொழுதையும் விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்

- Advertisement -

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மூன்று விதமான உணவுகளை சமைத்து தர வேண்டியது அனைத்து வீட்டில் உள்ள பெண்களின் வழக்கமான வேலையாகத் தான் இருக்கிறது. அதிலும் காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் இட்லி அல்லது தோசை தான் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதனுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், குருமா இதுபோன்ற சைடிஷ்கள் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தவையாக இருக்கின்றன. அவ்வாறு சாம்பார் வைத்தால் அதில் பலவித சாம்பார் செய்யப்படுகிறது. அதிலும் இட்லி, தோசை என்றாலே அதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பாசிப்பருப்பு சாம்பார் மிகவும் அருமையாக இருக்கும். அவ்வாறு சுவையாக இருக்கும் இந்த பாசிப்பருப்பு சாம்பாரை ஒரு முறை இந்தப் பக்குவத்தில் செய்து பாருங்கள். வாயில் வைத்தவுடனே நாவில் எச்சில் ஊறும் சுவையில் அவ்வளவு சூப்பராக இருக்கும். இந்த பாசி பருப்பு சாம்பாரை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – ஒரு டம்ளர், பச்சை மிளகாய் – 4, தக்காளி – 3, பெரிய வெங்காயம் – ஒன்று, சீரகம் – ஒரு ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கத்தரிக்காய் – 2, கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், பூண்டு – 4 பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு குக்கரில் ஒரு டம்ளர் பாசிப்பருப்பை சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, இரண்டு முறை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி இவற்றுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் தக்காளி மற்றும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி பருப்புடன் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கால் ஸ்பூன் வெந்தயம் இதனையும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

- Advertisement -

பின்னர் இரண்டு கத்தரிக்காய்களை பொடியாக நறுக்கி பருப்புடன் சேர்த்து கலந்து விட்டு, குக்கரை மூடி அடுப்பின் மீது வைக்க வேண்டும். குக்கரில் இருந்து பிரஷர் வர ஆரம்பித்ததும் குக்கர் விசில் போட்டு, ஐந்து விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு குக்கரை இறக்கி, பிரஷர் குறைந்ததும் குக்கர் மூடியைத் திறந்து மத்து வைத்து நன்றாகக் அடைந்துவிட வேண்டும்.

பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு 10 சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கிய பின்னர், இந்த தாளிப்பை சாம்பாருடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி தழையை தூவி கலந்து விட்டால் சுவையான பாசிப்பருப்பு சாம்பார் தயாராகிவிடும்.

சற்று முன்