பச்சைப் பயறு கிரேவி 10 நிமிஷத்துல ஈஸியாக செம டேஸ்டாக இப்படி கூட செய்யலாம்.

- Advertisement -

பச்சை பயறு கிரேவி | Pachai payaru gravy recipe in Tamil

ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயிறு பல விதங்களில் நம்முடைய உடலுக்கு நன்மை செய்கிறது. அதிக அளவில் நாம் சேர்க்க வேண்டிய இந்த சத்துள்ள பச்சை பயிறு விதவிதமான வகைகளில் உணவில் சமைத்து அசத்தலாம். அந்த வகையில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என்று எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள சூப்பரான பச்சை பயிறு கிரேவி ரெசிபி எப்படி ஈசியாக 10 நிமிடத்தில் செய்து அசத்துவது? என்பதைத் தான் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

தேவையான

பச்சைப்பயிறு – 100 கிராம், சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு. அரைக்க: தேங்காய் துண்டுகள் – ஒரு கைப்பிடி, பூண்டு – மூன்று பல், வர மிளகாய் – 2, சோம்பு – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

முதலில் 100 கிராம் அளவிற்கு பச்சை பயிரை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். முந்தைய நாள் இரவே இதனை ஊற வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் நீங்கள் சமைக்கும் பொழுது சுத்தமான தண்ணீர் ஊற்றி கொஞ்சம் போல் உப்பு போட்டு மூன்று விசில் விட்டு குழைய வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலி ஒன்றை வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடுங்கள். ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்குவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் மூன்று பல் பூண்டினை தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். வாசனைக்கு அரை டீஸ்பூன் சோம்பும், காரத்திற்கு ஏற்ப இரண்டு வரமிளகாயும் காம்பு நீக்கி சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் வெங்காயம் வதங்கிய பிறகு, ஒரு பெரிய தக்காளி ஒன்றை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். இவை மசிய வதங்கி வரும் பொழுது மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து லேசாக வதக்கி கொள்ளுங்கள். பின்னர் இவற்றின் பச்சை வாசம் போனதும், நீங்கள் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் நீங்கள் வேக வைத்து எடுத்துள்ள பச்சைப் பயிரை சேர்த்து நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒரு ரெண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு அவித்த முட்டை சாப்பிட பிடிக்காதா? அப்போ சட்டுனு 5 நிமிஷத்துல அவிச்ச முட்டை ஃப்ரை இப்படி பண்ணுங்க இனி விரும்பி சாப்பிடுவீங்க!

அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. கிரேவி போல திக்காக செய்து கொள்ளுங்கள். நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து நறுக்கிய மல்லித்தழை தூவி கலந்து விட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க, இதை சூடான சாதம், கலவை சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக் கொண்டு சாப்பிடலாம், செமயாக இருக்கும், ஆரோக்கியமும் கூட! ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -