- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இந்த இரண்டு பொருள் வைத்து செய்யும் வித்தியாசமான காலை உணவை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்....

இந்த இரண்டு பொருள் வைத்து செய்யும் வித்தியாசமான காலை உணவை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். செய்யும் அனைத்தும் மிச்சமில்லாமல் தீர்ந்துவிடும்

- Advertisement -

இட்லி, தோசை சப்பாத்தி, பூரி, பொங்கல் போன்ற உணவு வகைகளை தான் காலை உணவாக சமைத்து கொடுக்கிறோம். அதிலும் பெரும்பாலான வீடுகளில் திசை மட்டுமே காலை உணவாக இருக்கிறது. ஏனென்றால் இதனை மட்டும்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். ஆனால் இவற்றை விட மிகவும் ஆரோக்கியமான ஒரு புதுமையான உணவு வகைகயை காலை உணவாக சமைத்து கொடுத்து பாருங்கள். அன்றைய நாள் முழுவதும் அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அப்படி உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்க கூடிய ஒரு சுவையான உணவு வகையை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poori-onion-masala

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – ஒரு கப், கடலைப்பருப்பு – கால் கப், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 1, எண்ணெய் – கால் லிட்டர், சீரகம் – 1 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சோடா உப்பு – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் பாசிப்பருப்பு மற்றும் கால் கப் கடலைப் பருப்பை ஒன்றாக சேர்த்து, இரண்டு மூன்று முறை நன்றாகக் கழுவி விட்டு, தண்ணீர் ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு, இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

kadalai-paruppu

பிறகு இந்த மாவுடன் ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோடா உப்பு மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த மாவை 10 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ,அடுப்பின் மீது வைத்து, இட்லி தட்டுகளில் கலந்து வைத்துள்ள மாவினை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக வைக்க வேண்டும். இவற்றை வேகமான தீயில் 15 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது ஒரு பேனை வைத்து, மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

ammini-kara-kozhukattai

பின்னர் அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வதக்கி விட்டு, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பிறகு வேக வைத்துள்ள உருண்டைகளை எடுத்து இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி இழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சத்து மிக்க காலை உணவு தயாராகிவிட்டது.

சற்று முன்