20 ரூபாய்க்கு பாஸ்தா வாங்கினால் சமைக்கிறது இவ்வளவு ஈஸியா? ஒரு முறை அனைவரும் விரும்பும் ஃபேவரட் பாஸ்தா செஞ்சு தான் பார்ப்போமே!

spring-pasta1_tamil
- Advertisement -

தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு நூடுல்ஸ், பாஸ்தா பக்கம் ஆசை திரும்பும். இந்த சமயங்களில் நீங்கள் பாஸ்தா வாங்கி இப்படி சமைச்சு பாருங்க, ரொம்பவே ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவீங்க. சாஸ் எதுவும் சேர்க்காமல் ரொம்பவே எளிதாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசாலா பாஸ்தா ரெசிபி சூப்பரான சுவையில் எளிதாக எப்படி செய்வது? அப்படின்னு தெரிஞ்சுக்குவோம் வாங்க.

தேவையான பொருட்கள்

பாஸ்தா – 2 கப், தக்காளி – 3, காய்ந்த மிளகாய் – மூன்று, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், முட்டை – ரெண்டு அல்லது நறுக்கிய காய்கறிகள் – அரை கப், கரம் மசாலா – ஒரு ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், மிளகுத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை

பாஸ்தா நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் உங்களுக்கு விருப்பமான வடிவங்களில் பாஸ்தாக்களை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். ஸ்பிரிங் வடிவில் இருக்கக்கூடிய இந்த பாஸ்தா ரொம்பவே சுவையாக இருக்கும். ரெண்டு கப் அளவிற்கு இந்த பாஸ்தா நூடுல்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். கொதிக்கும் தண்ணீரில் பாஸ்தா நூடுல்ஸ் சேர்த்து மீடியம் ஃபிளேமில் வைத்து ஏழு நிமிடம் சரியாக வேக வைத்துக் கொள்ளுங்கள். சரியான பதத்தில் வேக வைத்த பின்பு தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி விட்டு பாஸ்தாவுடன் ரெண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு நான்ஸ்டிக் பேன் அல்லது வாணலி ஒன்றை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்தால் ரொம்ப நல்லது. இவை காய்ந்ததும் பெரிய வெங்காயம் ஒன்றை பொடி பொடியாக நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி சேர்த்து வதக்கி விடுங்கள். வெங்காயம் வதங்குவதற்குள் மூன்று பெரிய தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் வதங்கி வரும் பொழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் பொடியாக நறுக்கிய உங்கள் விருப்பமான காய்கறிகள் இருந்தால் அரை கப் அளவிற்கு சேர்த்து அதையும் நன்கு வதக்கி விடுங்கள். பின் கரம் மசாலா, மிளகாய்த்தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். காய்கறி பாதி அளவிற்கு இதிலேயே நன்கு வேக வேண்டும். காய்கறிக்கு பதிலாக அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டையை உடைத்து ஊற்றி வதக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
2 மினிட்ஸ் மேகி இப்படி கூட செய்யலாமா? 5 மினிட்ஸ் ஆனாலும் செம டேஸ்டா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க!

காய்கறிகள் வெந்து வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி மிளகாய் பேஸ்ட் சேர்த்து மூடி வைத்து ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க வையுங்கள். பச்சை வாசம் போனதும் கெட்டியாக திரண்டு வரும். இந்த சமயத்தில் நீங்கள் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து பிரட்டி விடுங்கள். ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து வந்த பிறகு மிளகுத்தூள், நறுக்கிய மல்லி தழை தூவி ஒரு முறை நன்கு பிரட்டி விடுங்கள். பிறகு அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாறி பாருங்கள். ரொம்பவே அசத்தலான சுவையில் இந்த மசாலா பாஸ்தா ரெசிபி நிச்சயம் இருக்கும், உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -