- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்கள் தீர பசுவிற்கு செய்ய வேண்டிய தானம்

கஷ்டங்கள் தீர பசுவிற்கு செய்ய வேண்டிய தானம்

- Advertisement -

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. எவன் ஒருவன் அந்த கஷ்டத்தை எல்லாம் கடந்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்து, பிரச்சினைகளை எதிர்கொண்டு, போராடி மீண்டு வருகின்றானோ, அவன் தான் வாழ்க்கையில் ஜெய்கின்றான். உங்களுடைய வாழ்க்கையும் போராட்டத்தில் நகர்ந்து செல்கிறதா, இந்த ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் உங்களுக்காக மட்டுமே.

பசுவிற்க்கு செய்ய வேண்டிய தானம்

பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்வதாக சாஸ்திரம் சொல்கிறது. ஆகவே பசு மாட்டிற்கு நம் கையால் கொடுக்கக்கூடிய தானங்கள் நம்முடைய கெட்ட கர்மாக்களை குறைக்கும். இதனால் வரக்கூடிய பிரச்சினைகளும் குறையும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் செவ்வாய் கிழமை தோறும் பசு மாட்டிற்கு ஒரே ஒரு செவ்வாழை வாங்கி தானம் கொடுங்கள். உங்கள் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எல்லாம் படிப்படியாக குறைய தொடங்கும்.

- Advertisement -

திங்கட்கிழமை ஒரு அகத்திக்கீரை கட்டை வாங்கி பசு மாட்டிற்கு தானம் கொடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக திங்கட்கிழமை கலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பசு மாட்டிற்கு இந்த பொருளை தானமாக கொடுத்தால் உங்கள் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். விநாயகரை மனதில் நினைத்துக் கொண்டு இந்த தானத்தை செய்யுங்கள்.

புதன்கிழமை, பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய எந்த பொருளை வேண்டுமென்றாலும் பசு மாட்டிற்கு தானம் செய்யலாம். பச்சை நிறத்தில் இருக்கும் கீரை, பச்சை நிறத்தில் இருக்கும் காய்கள் ஏதாவது பசுமாடு சாப்பிட தகுந்தபடி இருக்கும் பட்சத்தில் அதை வாங்கி பசு மாட்டிற்கு தானம் செய்யுங்கள். இதனால் உங்களுடைய அறிவுத்திறன் வளரும். உங்களுடைய பிள்ளைகளுக்கு கல்வியில் ஏதேனும் பின்னடைவு இருந்தால் அதை சரி செய்யவும் இந்த பரிகாரம் கை கொடுக்கும்.

- Advertisement -

வியாழக்கிழமை மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய லட்டு வாங்கி பசு மாட்டிற்கு தானம் கொடுக்கவும். இனிப்பு நிற பொருட்களை, பசு மாட்டிற்கு கொடுக்கும்போது அளவோடு கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கையால் ஒரு லட்டுவை வாங்கி பசு மாட்டிற்கு வாயில் வைத்து விடுங்கள் போதும்.

அதிகம் நல்லது நடக்க வேண்டும் என்று பத்து லட்டு கொண்டு போய் பசு மாட்டிற்கு கொடுக்கக் கூடாது. வீட்டில் மங்களகரமான காரியங்கள் தடையாக இருந்தால் அதை சரி செய்ய இந்த பரிகாரம் உதவி செய்யும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு இருந்தால் அதை சரி செய்யவும் இந்த பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை வெள்ளை நிற கேசரி, வெள்ளை நிற பாயாசம் எதுவாக இருந்தாலும் ஏலக்காய் சேர்த்து அதை பசு மாட்டிற்கு கொடுக்கும் போது உங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்கும்.

வெள்ளிக்கிழமை இரவு கொஞ்சமாக கருப்பு உளுந்தை எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். சனிக்கிழமை காலை எழுந்தவுடன் முதல் வேலையாக இந்த உளுந்தில் ஒரு கட்டி வெள்ளத்தைப் போட்டு, நன்றாக கலந்து பசுமாட்டுக்கு கொண்டு போய் சாப்பிட கொடுத்து விடுங்கள். பசு சாப்பிட்டு முடித்தவுடன் இந்த உளுந்து தண்ணீர் கொஞ்சமாக அந்த பக்கெட்டில் மீதம் இருக்கும் அல்லவா. அதை எடுத்து உங்களுடைய தலையில் தெளித்துக் கொள்ளுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நிற வாழைப்பழம் கொண்டு போய் பசுவிற்கு தானமாக கொடுங்கள். ஞாயிற்றுக்கிழமை செவ்வாழையின் பசு மாட்டிற்கு கொடுக்கலாம். கோதுமை மாவால் செய்யப்பட்ட சப்பாத்திகளை பசு மாட்டிற்கு கொடுக்கலாம். உங்கள் வருமானத்தில் இருக்கும் குறைபாடுகள் நீங்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீரும் அரசாங்க வேலை கிடைக்கவும் இந்த பரிகாரம் உதவி செய்யும்.

ஏழு நாளும் இந்த பரிகாரத்தை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையை அதிகமாக இருக்கிறதோ, அதை சரி செய்வதற்கு அந்த கிழமையை தேர்ந்தெடுத்து தொடர்ந்து அந்த பரிகாரத்தை செய்து வரவும். இப்படி பசு மாட்டிற்கு சாப்பிட கொடுக்கும் போது அந்த பொருளை மண்ணில் போட்டுவிட்டு, பசுவை சாப்பிட வைக்க கூடாது. உங்கள் கைகளால் அதை பசுவிற்கு சாப்பிட கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணமழை பொழிய சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

முட்ட கூடிய பசுவிற்கு கொண்டு போய் இப்படி கொடுத்து பிரச்சினையாகி விடப் போகிறது. பசுவுக்கு சொந்தக்காரர் இருக்கும்போது ஜாக்கிரதையாக இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இல்லையென்றால் மாடு சாப்பிடக்கூடிய பாத்திரம் இருக்கும் அதன் உள்ளே போட்டு பசுவை சாப்பிட வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்